எம்ஜிஆர் பேச்சை கேட்காத சில்க் ஸ்மிதா?

 


எம்ஜிஆர் பேச்சை கேட்காத சில்க் ஸ்மிதா? தியாகராஜன் சொன்ன டாப் சீக்ரெட்.. 



மகன் பிரசாந்தின் அந்தகன் படத்தை இயக்கி வரும் இயக்குநர் தியாகராஜன் சமீபத்தில் ஆன்லைன் போர்ட்டல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சில்க் ஸ்மிதா பற்றிய சுவாரஸ்ய தகவல் ஒன்றை ஷேர் செய்து ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார்.
அலைகள் ஓய்வதில்லை, டிக் டிக் டிக், உள்ளிட்ட பல படங்களில் குணசித்ர நடிகராக நடித்து வந்த தியாகராஜன் ஹீரோவாகவும் நடித்து அசத்தினார். 1983ம் ஆண்டு அவர் நடிப்பில் வெளியான மலையூர் மம்பட்டியான் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதே படத்தை மகன் பிரசாந்தை வைத்து ரீமேக்கும் செய்திருந்தார்.
இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் தனது மகன் விஜய்யை ஹீரோவாக்கியது போலவே இயக்குநர் தியாகராஜனும் தனது மகன் பிரசாந்தை ஹீரோவாக்கினார். நடிகர் பிரசாந்தின் சினிமா எதிர்காலத்துக்காக தற்போதும் உழைத்து வருகிறார் தியாகராஜன் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தகன் இயக்குநர் பாலிவுட்டில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த அந்தாதூன் திரைப்படம் மலையாளத்தில் பிருத்விராஜ் நடிப்பில் பிரம்மம் என வெளியானது

. அதே திரைப்படம் தமிழில் அந்தகன் எனும் பெயரில் உருவாகி வருகிறது. மோகன் ராஜா இயக்குவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அவர் அந்த படத்தில் இருந்து வெளியேறினார். பின்னர் ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படத்தை இயக்கிய பிரெட்ரிக் அந்தகன் படத்தை இயக்கி வந்த நிலையில், மீண்டும் சில பிரச்சனைகள் நடக்க அவரும் படத்தில் இருந்து வெளியேறினார். கடைசியாக படத்தை நானே இயக்குகிறேன் என தியாகராஜன் அந்தகன் படத்தை இயக்கி உள்ளார்.


1984ம் ஆண்டு வெளியான நீங்கள் கேட்டவை படத்தில் தியாகராஜன் மற்றும் சில்க் ஸ்மிதா இணைந்து ஆடிய "அடியே மனம் நில்லுன்னா நிக்காதடி மிகப்பெரிய ஹிட் அடித்தது. தொடர்ந்து சில படங்களில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டியில் சில்க் ஸ்மிதா பற்றிய சில டாப் சீக்ரெட்டான சுவாரஸ்ய விஷயங்களை தியாகராஜன் ரிவீல் செய்துள்ளார்.
எம்ஜிஆர் சொல்லியும் 
அலைகள் ஓய்வதில்லை படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொண்ட எம்ஜிஆர், சில்க் ஸ்மிதாவிடம் நீங்கள் நல்ல ஆர்ட்டிஸ்ட், நல்ல குணசித்ர நடிகையாக பல படங்களில் நடிக்கலாமே எனக் கேட்டார். ஆனால், சில்க் ஸ்மிதா நடனத்தை சினிமாவில் முன்னெடுத்து பல நடிகர்கள் படங்களிலும் சில்க் ஸ்மிதா இல்லாத நிலை இருக்க வேண்டும் என உருவாக்கினார். ஆனால், அவர் எதிர்பாராத விதமாக தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது என்றார்.





Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி