இசை அமைப்பாளர் #வித்யாசாகர்
இசை அமைப்பாளர் #வித்யாசாகர் அவர்களுக்கு என் அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள் 💕
*
நான் இயக்கிய 'தித்திக்குதே' திரைப்படத்துக்காக வித்யாசாகர் அவர்களோடு பணிபுரிந்த நாட்கள் எப்போதும் என் நினைவில் தித்திக்கும் நாட்கள்.
கவிதைகளின் காதலர்; நகைச்சுவை உணர்வு நிரம்பியவர்; ஆழமான இசையறிவு கொண்டவர் வித்யாசாகர்.
பெரும்பாலும் பாடல் வரிகளை முன்கூட்டியே வாங்கி அதற்கு ட்யூன் போடுவது அவரது சிறப்பு.
அவரது மெல்லின இதயத்தில் இருந்து பிறந்த எத்தனையோ மெலடிகளுக்கு நான் ரசிகன்.
'தித்திக்குதே' திரைப்படத்துக்காக அவர் இசை அமைத்த
'மைனாவே.... மைனாவே...'
'சில்லென்ற தீப்பொறி ஒன்று'
போன்ற பாடல்கள் காற்றில் மிதந்தபடியே இருக்கின்றன.
'தித்திக்குதே' என்ற ஒரு சொல்லை வைத்துக்கொண்டு ஒரு பாடலுக்கு
இசை அமைக்கும்படி அவரிடம் கேட்டுக் கொண்டேன். காதல் பூத்த பெண்ணொருத்தியின் கனவும் நினைவும் முயங்கும் சூழல். தீபத்திருநாள் வேறு.
கொண்டாட்டமான இசையில் தொடங்கி மன ஆழத்தில் இருந்து குபுகுபுவென உற்சாகம் பீறிட வேண்டும் என என் விருப்பத்தைத் தெரிவித்தேன். அவர் ஒரு இந்திர ஜாலமே செய்துவிட்டார் அப்பாடலில்.
நாயகியின் அவ்வுணர்வை அழகான மெலடியில் துள்ளும் இசையோடு வெளிப்படுத்தி இருந்தார்.
கவிஞர் வைரமுத்துவின் வரிகளில் பாடகி சுஜாதா குரலில் மலர்ந்த பாடல் அது.
படத்தின் தீம் ம்யூசிக்கும் அதுவே. படத்தின் அடையாள இசையானது.
இன்று பிறந்தநாள் காணும் இதயம் கவர்ந்த இசை அமைப்பாளர் #வித்யாசாகர் அவர்களுக்கு என் அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்களை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.
*
பிருந்தா சாரதி
*
Comments