குரு பகவான் மந்திரம் :

 குரு பகவான் மந்திரம் : குரு பிரம்மா குரு விஷ்ணு

குரு தேவோ மகேஸ்வர;

குரு சாஷாத் பரப்பிரம்மா

தஸ்மை ஸ்ரீகுருவே நமஹஇம் மந்திரம் நவகிரகங்களில் உள்ள குரு அல்லது வியாழன் கிரகத்தையும், சிவ பெருமானின் இன்னொரு உருவான “தட்சிணாமூர்த்தியையும்” மற்றும் நமக்கு கல்வி மற்றும் வேறு கலைகள் ஏதாவது கற்று தரும் ஆசிரியர்களையும் குருவாக போற்றுகிறது. இதை வாரத்தின் அனைத்து நாட்களிலும் ஜெபிக்கலாம் என்றாலும் வியாழன் அன்று காலை மற்றும் மாலை வேளைகளில் 108 முறை கூறி வழிபட நீங்கள் புதிதாக கற்றுக்கொள்ளும் எந்த ஒரு விடயத்திலும் வெற்றி பெறுவீர்கள். மேலும் உங்களுக்கு “பிரம்மா, விஷ்ணு, சிவன்” என்ற மூன்று கடவுளர்களின் ஆசியும் கிட்டும்.


 உலகில் பிறந்த அனைவரும் வளர்ந்து பெரியவர்கள் ஆகும் வரை தானாக எல்லாவற்றையும் கற்றுக்கொள்வதில்லை. குறிப்பாக கல்வி மற்றும் கலைகள் அதில் பல்லாண்டுகள் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் அல்லது குருக்களிடம் பணிவாக இருந்து இவற்றை கற்றுக்கொள்ளும் எவரும் தங்களின் வாழ்வில் சிறக்கிறார்கள். புதிதாக எதையாவது கற்றுக்கொள்பவர்கள் இம்மந்திரத்தை கூறி வழிபடுவதால் நாம் நமது குருவிற்கு அறியாமல் செய்த பாவங்களை மன்னித்து நாம் அனைத்திலும் வெற்றியடைய “பிரம்மா, விஷ்ணு, சிவன்” என்கிற மும்மூர்த்திகளின் ஆசிகளும் நமக்கு கிடைக்கிறது.
Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

விநாயகருக்கு என்னென்ன பொருட்கள் அபிஷேகம் செய்தால் பலன்