தஞ்சை ராமையா தாஸ்

 தஞ்சை ராமையா தாஸ்
ஒரு சில பாடல் வரிகள் நம்மை வேறு ஒரு மனோ நிலைக்கு அழைத்துச் செல்லும் அப்படிப்பட்ட ஒரு சில பாடல்களை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன் அதில் ஒரு ஆச்சரியம் என்னவென்றால் எல்லா பாடல்களும் தஞ்சை ராமையாதாஸ் அவர்கள் எழுதிய பாடல்கள்தான்.
மாயா பஜார் திரைப்படத்தில் வரும் கல்யாண சமையல் சாதம் என்ற பாடல் உலகப் பிரசித்தி பெற்றது.
கல்லூரி நாட்களில் நான் வியந்தது இத்தனை வகையான தமிழர்கள் உணவுகளிலிருந்து இருக்கிறது அதை அப்போதே தஞ்சை ராமையாதாஸ் அவர்கள் அழகாக எழுதி இருக்கிறார் என்று வியந்தேன்.
மலைக்கள்ளன் திரைப்படத்தில் வரும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவாய் இந்த நாட்டிலே என்ற பாடல்...
1992 இல் ஒரு சிறிய கிராமத்தில் ஒரு மருந்துக் கடையை நிர்வகிக்கும் பணியில் இருந்தபோது அந்த ஊரில் வாரத்திற்கும் ஒருமுறையேனும் அரசியல் கூட்டம் நடக்கும் அந்த அரசியல் கூட்டத்தில் அதிகமாக போடப்பட்ட பாடல் என்னவென்றால் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே இந்த அற்புதமான பாடல்.
மணாளனே மங்கையின் பாக்கியம் என்ற திரைப்படத்தில் அழைக்காதே நினைக்காதே என்று கதாநாயகி கதாநாயகனை நோக்கி பாடும் ஒரு அற்புதமான ஒரு பாடல்.
பாடலை நன்றாக கவனித்துப் பார்த்தால் கதாநாயகி கதாநாயகன் மேல் உள்ள காதலை உணர்ந்து கொள்ள முடியும் எந்த ஒரு திரைப்படத்திலும் இப்படி ஒரு பாடல் நான் கேட்டதில்லை மிக அற்புதமாக எழுதப்பட்ட ஒரு பாடல்.
பானை பிடித்தவள் பாக்யசாலி (இப்படி ஒரு திரைப்படத்தின் பெயரை முதன்முதலாக இப்போதுதான் கேள்விப்படுகிறேன்). இந்த படத்தில் வரும் பாடல் புருஷன் வீட்டில் வாழப்போகும் பொண்ணே தங்கச்சி கண்ணே.... ஒரு அண்ணன் திருமண வாழ்வில் அடியெடுத்து வைக்கும் தங்கைக்கு அறிவுரை சொல்லும் விதமாக பாடல் அமைந்திருக்கும் பெரும்பாலான கிராமப்புற கல்யாணத்தில் இந்த பாடல் இல்லாமல் இல்லை.
மிஸ்ஸியம்மா என்ற திரைப்படத்தில் பிருந்தாவனமும் நந்தகுமாரனும் யாவருக்கும் எனத்தொடங்கும் மிகப் பிரபலமான பாடல் எனது தாத்தா இந்த இசை தட்டை அடிக்கடி போட்டு கேட்டுக் கொண்டிருப்பார் அந்த இசைத்தட்டை அதன் அருகில் கூட யாரையும் செல்ல விடமாட்டார் ஏனென்றால் அவ்வளவு தூரம் இந்த பாடல் மேல் ஒரு விருப்பம் கொண்டவர்.
நீங்களும் இணையத்தில் தஞ்சை ராமையாதாஸ் பாடல்கள் என தேடி அதன் பாடல்களை கேட்டு மகிழ்ந்து பின்னர் எனக்கு ஒரு பதில் தாருங்கள்.
ஒரு பின்குறிப்பு ராமதாஸ் அவர்கள் 1962 ல் "திருக்குறள் இசை அமுதம்" என்ற நூலை எழுதினார். இந்த நூலுக்கு முனைவர் மு. வரதராசன், எம். எம். தண்டபாணி தேசிகர் ஆகியோர் அணிந்துரை தந்திருந்தனர். அப்போதைய தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராக இருந்த எம்.ஜி.ஆர். நூலை வெளியிட்டார்.
கடையநல்லூர் ராஜா
இணையத்தில் இருந்து எடுத்தது

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,