`வெல்கம் பேக் பாவனா'- கரகோஷம் அதிர மேடையில் தோன்றி சர்ப்ரைஸ்!

 

`வெல்கம் பேக் பாவனா'- கரகோஷம் அதிர மேடையில் தோன்றி சர்ப்ரைஸ்!
நடிகை பாவனா 5 வருடங்களுக்குப் பிறகு சமீபத்தில் தன்னுடைய கம்பேக் மலையாளத் திரைப்படத்தை அறிவித்திருந்தார். அவருக்கு பல தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்தவண்ணம் இருந்தன. இப்போது கேரளாவில் தொடங்கியிருக்கும் சர்வதேச திரைப்பட விழாவுக்கு சர்ப்ரைஸ் கெஸ்ட்டாக வருகை தந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். விழா மேடைக்கு அவர் வருவது அறிவிக்கப்பட்டவுடன் எழுந்த கரகோஷம் சில நிமிடங்களுக்கு நீடித்தது. கேரளா சர்வதேசத் திரைப்பட விழா திருவனந்தபுரத்தில் மார்ச் 18 தொடங்கியுள்ளது. 15 திரையரங்குகளில் 180க்கும் மேற்பட்ட உலகத் திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன. இந்த நிகழ்வை கேரள முதல்வர் பினராயி விஜயன் தொடங்கி வைத்தார்.

பாவனா வருவதாக நிகழ்வுப் பட்டியலில் முன்னரே பெயர் வெளியிடப்படாத நிலையில், அவர் சர்ப்ரைஸ் கெஸ்ட்டாக விழா மேடைக்கு வருகை தந்தார். விளக்கு ஏற்றும் தொடக்க நிகழ்வில் கலந்து கொண்டார்.

கேரள கலாசாரத் துறை அமைச்சர் ஷாஜி செரியன் (Saji Cherian) "கேரளாவின் ரோல் மாடல் நீங்கள் பாவனா" எனப் பேசினார்.

இதில் பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பாவனா நிகழ்வில் கலந்து கொண்ட காணொலியைப் பகிர்ந்து நடிகை பார்வதி மேனன், "வெல்கம் பேக் பாவனா. இது உங்களுக்குக்கான இடம். உங்கள் கதை. உங்களுடையது!" எனப் பதிவிட்டுள்ளார்.

பாவனா ‘Ntikkakkakkoru Premondarnn’ என்கிற படத்தில் நடிக்கவுள்ளார். இதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. மலையாளத்தில் அவர் கடைசியாக நடித்தது 2017ல் வெளிவந்த 'Adam Joan' என்கிற படம். அதன் பிறகு கன்னட படங்களில் நடித்தார். ஐந்து வருடங்களுக்குப் பிறகு மலையாளத் திரையுலகத்திற்கு வரும் பாவனாவை ரசிகர்கள் ஆர்ப்பரித்து வரவேற்ற வண்ணம் உள்ளனர். இந்த நிகழ்வு தொடர்பான வீடியோக்களும் படங்களும் தற்போது வைரலாகி வருகின்றன.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சிங்கப்பெண்ணே மகளிர் தின கவிதை