அப்பாவை பற்றி மகன்

 அப்பா கூட நான் 19 படங்கள் பண்ணியிருக்கேன். சில படங்கள் மக்களுக்காக என்னை கட்டாயப்படுத்தி பண்ண வச்சாங்க. அவர் கூட நடிக்கும் பொழுது நிறைய கற்றுக்கொண்டேன். ஓர வஞ்சனயெல்லாம் பண்ண மாட்டாரு. எல்லோருக்கும் சொல்லிக்கொடுப்பது போலவே சொல்லிக்கொடுப்பாரு. நீயும் நடி , நானும் நடிக்கிறேனு போட்டி போட்டு நடிப்பாரு. நானெல்லாம் அந்த டைம்ல கான்வெண்ட் தமிழ், சொல்லவே வெட்கமா இருக்கு. அவர் என்னை தமிழை அழகா உச்சரிடானு பல முறை சொல்லியிருக்காரு. முதல்ல திட்டுவாரு அதுக்கு பிறகு யார்ரா இவனையெல்லாம் கூட்டிட்டு வந்தது சொல்லுவாரு. அப்பா கூட சங்கிலி படத்துல சண்டை போட வச்சுட்டாங்க. அப்பா என்னை உண்மையில வெளுத்துட்டாரு. 30 படங்களுக்கு பிறகு 10 மாதங்கள் பிரேக் எடுத்தேன். அதன் பிறகு அப்பாக்கூட நடிப்பதில்லைனு முடிவு பண்ணேன். எனக்கு என்னவோ அவர் நிழல்லயே இருக்க மாதிரி இருந்தது. அதன் பிறகு அப்பாவும் சொன்னாரு, நீ என்கூட நடிக்காதப்பா.. உன்னை கட்டாயப்படுத்தி நடிக்க வைக்குறாங்க. உன்னோட அடையாளம் தெரியாம போயிடும்னு சொன்னாரு. அதன் பிறகு செகெண்ட் ஹீரோவாக நடிக்க ஆரமிச்சேன். படிப்படியாக வாய்ப்புகள் வந்தது. என்னை வச்சு கிட்டத்தட்ட 16 படங்கள் வாசு சார் பண்ணாரு. சின்னத்தம்பி படத்தை பார்த்துவிட்டு, அப்பா எனக்கு ஒரு பீம் சிங் கிடைத்தது போல உனக்கு வாசுனு சொன்னாங்க. நானும் குஷ்புவும் தர்மத்தின் தலைவன் படத்துலதான் முதன் முதலா ஒன்னா நடித்தோம். சின்னத்தம்பி படத்துல குஷ்புவை நடிக்க வைக்க கஷ்டப்பட்டது தயாரிப்பாளரும் , வாசு சாரும்தான். குஷ்பு ரொம்ப பிஸியா நடிச்சுட்டு இருந்த டைம் அது. அவங்கள கஷ்டப்பட்டு அழைச்சுட்டு வந்தாங்க. அவங்களும் ரொம்ப அழகா நடிச்சிருந்தாங்க. என்கூட அதிக படங்கள் பண்ணது குஷ்புதான். அவங்க கூட அதிக ஹிட் கொடுத்தது நான் தான்“ என சினிமா வாழ்க்கை குறித்து பகிர்ந்து இருக்கிறார் பிரபு.

நன்றி: ABP நாடு

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,