சாதனைக்கு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்
இந்தியா கண்ட மகத்தான வேகப்பந்து வீச்சாளராக கருதப்படும் முன்னாள் கேப்டன் மற்றும் ஜாம்பவான் கபில்தேவ் தனது ஆல்டைம் சாதனையை அஸ்வின் முறியடித்தது பற்றி மனம் திறந்துள்ளார்.
இதுபற்றி அவர் பேசியது பின்வருமாறு. “சமீப காலமாக முழு வாய்ப்பை பெறாத அவருக்கு இது ஒரு மிகப்பெரிய சாதனையாகும். அவருக்கு கிடைக்காத வாய்ப்புகளிலும் அவர் விளையாடியிருந்தால் இந்த 434 விக்கெட்டுகளை அவர் எப்போதோ கடந்திருப்பார். அவரின் இந்த சாதனைக்கு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் அந்த 2வது இடத்தை எதற்காக நான் இன்னும் பிடித்துக் கொள்ள வேண்டும்? என்னுடைய காலங்கள் முடிந்து போய் விட்டன” என பாராட்டினார்.
இணையத்தில் இருந்து எடுத்தது
Comments