கடைசி_விவசாயி/

 கடைசி_விவசாயி/திரை விமர்சனம்
இயக்குனர் ம. மணிகண்டன் மீண்டும் ஒரு அருமையான எதார்த்தமான வாழ்வியலை தந்துள்ளார். 


விவசாயம் சார்ந்து பல படங்கள் வந்தாலும் அவை மனதோடு ஒன்றிப் போவதில்லை.விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்களுக்கே உரித்தான பேச்சு வழக்கு  நடைமுறைப் பழக்க வழக்கங்கள் மற்றும் இயல்பான வாழ்க்கையை அமைத்து தந்துள்ளது கடைசி விவசாயி. 


மதுரை தேனி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள மக்களின் இயல்பிலே கடைசி விவசாயி அமைந்துள்ளது எனலாம். 


விவசாயம் செய்வதற்கு வயது ஒருபோதும் தடை இல்லை என்பதை  கடைசி விவசாயி கதாநாயகனாகிய மாயாண்டி தாத்தா நிரூபித்து விட்டார். 


இன்று பல கிராமங்களில் நிலங்களை விற்பதற்கு தூண்டும் தரகர்கள் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு தேவையான 500 ரூபாய் கமிஷனுக்காக பல அப்பாவி மக்களை நிலத்தை விற்றுவிட்டு நிம்மதியாக இருக்கலாம்ல என்று மனச் சலவை செய்கிறார்கள். 


நிலம் இருக்கும் வரை தான் உணவு என்பதை மறவாத விவசாயிகள் இன்றும் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள். 


மயிலை அடித்து தன் தோட்டத்தில் புதைத்தார் என்பதாக மாயாண்டி தாத்தா கைதி செய்யபடுவார் . நீதிமன்றத்தில் நீதிபதி காவலர்கள் பொய் வழக்கு போட்டு தான் கைதி செய்து உள்ளார்கள் என்பதை புரிந்து கொண்டு MF சமர்பித்தால் தான் உங்களை விடுதலை செய்ய முடியும் என்று சொல்வது மட்டுமின்றி, காவலர் ஒருவரை அவருடைய தோட்டத்திற்குச் தண்ணீர் பாயிச்ச வேண்டுமென்று உத்தரவிடுவார். 


ஆரம்பத்தில் சிரமப்பட்டு வேலைச் செய்யும் காவலர் பின்னர், நான் நிம்மதியாக இருக்க கூடிய இடமே இங்கு தானென்று கூறுவார். 


இன்றைய நாகரீக உலகில் மக்கள் எல்லாரும் how to release stress? என்பதற்கு கூகுளில் தேடியும் புத்தகங்களை படித்தும் தெரிந்து கொண்டது நாள்தோறும் செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும். நீங்கள் வேலைச் செய்யும் மேஜையில் ஒரு செடியை வைத்துக் கொண்டு அதை நீங்கள் பார்க்கும் போது stress குறையும் என்பது தான் நாகரீக தேடல். 


ஒரு மனிதன் வாழ உணவு எவ்வளவு முக்கியம் என்பதை விட அவன் அதை உருவாக்க எவ்வளவு தூரம் மெனக்கெடுகிறார் என்பது தான் முக்கியம். 


ஆத்மார்த்தமான நடிப்பை அள்ளி அள்ளிக் கொடுக்கும் ஒவ்வொரு பாட்டியும் நான் பள்ளிக்கூடம் போயிட்டு வரும் போது வீட்டு திண்ணையில் உட்கார்ந்து அரட்டை அடிக்கும் அனைத்து கிழவிகளும் கண்முன் வந்து போனார்கள்.இத்தருணம் உங்கள் அனைவரையும் நான் நினைத்துக் கொள்கிறேன். 


விவசாயம் ஒரு மனிதனை இன்னொரு மனிதனுடன் இணைக்க கூடிய வேர் விதை . 


படத்தில் நடித்த அனைவரும் அமோகமாக நடித்துள்ளார்கள். 


அழுத்தமான படம். கண்டிப்பாக பார்க்காதவர்கள் பாருங்கள். நம்மை நாம் உயிர்ப்புடன் வைத்துக் கொள்ளலாம். - கீர்த்தனா பிருத்விராஜ்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

ஆரஞ்சுப் பழத்தின் பயன்கள்:

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி