"என்னை தேய் அடுத்த நாளுக்காக"/ கவிதை/மகளிர் தினம் 2022
மகளிர் தினமா அப்படினா
எல்லா பக்கமும் முகநூலில்,பகிரியில், செயலிகளில்
விளம்பரங்களில், சமூக வலை தளங்களில், தகவல்களில்
கைப்பேசி அழைப்புகளில்...
கவிதைகளில், பட்டி மன்றத்தில்...
ஆனால் நிஜத்தில் சராசரியாக ஒரு மகளிருக்கு காலையில் பால் குக்கரில், ப்ரெஷர் குக்கரில் ஆரம்பித்து அலுவல் வீடு
குழந்தைகள் என தொடர்ந்து இரவு சிங்கில் விழும்
பாத்திரங்கள் "என்னை தேய்
அடுத்த நாளுக்காக"
என இளிப்பது,
போல்தான் முடிகின்றது.....
---சுபா மோகன்
Comments