வாழைப்பூவில் வடை மட்டும் இல்லை... இப்படியொரு டேஸ்டியான டிஷ்
வாழைப்பூவில் வடை மட்டும் இல்லை... இப்படியொரு டேஸ்டியான டிஷ்
வாழைப்பூ என்றாலே பலரும் வடை அல்லது கூட்டு தான் செய்வார்கள். ஆனால் இப்படி வித்தியாசமான சுவையில் கோலா உருண்டை செய்து சாப்பிட்டிருக்கீங்களா..? மட்டன் கோலா உருண்டை சுவையில் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
வாழைப்பூ எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. அதை அடிக்கடி செய்ய முடியாவிட்டாலும் வாரத்தில் ஒரு முறையேனும் செய்து சாப்பிடலாம். வாழைப்பூ என்றாலே பலரும் வடை அல்லது கூட்டு தான் செய்வார்கள். ஆனால் இப்படி வித்தியாசமான சுவையில் கோலா உருண்டை செய்து சாப்பிட்டிருக்கீங்களா..? மட்டன் கோலா உருண்டை சுவையில் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
வாழைப்பூ - 1
பச்சை மிளகாய் - 4
மோர் - 1 கிளாஸ்
சின்ன வெங்காயம் - 10
பூண்டு - 7 பற்கள்
மஞ்சள் தூள் - 1/4 tsp
மிளகாய் தூள் - 1/2 tsp
இஞ்சி - 1/2 துண்டு
முந்திரி - 5
சோம்பு - 1/2 tsp
மிளகு - 1/2 tsp
பட்டை - 1/2 துண்டு
தேங்காய் - 4 பத்தை
பொட்டுக்கடலை - 3 tsp
உப்பு - 1/4 tsp
எண்ணெய் -1/4 லிட்டர்
கறிவேப்பிலை - 1 கொத்து
கொத்தமல்லி - 1கொத்து
செய்முறை :
வாழைப்பூவை சுத்தம் செய்து மோர் தண்ணீரில் ஊற வையுங்கள். இதனால் கருத்துப் போகாமல் இருக்கும்.
பின் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றுங்கள். பின் பூண்டு பற்கள் சேர்த்து வதக்குங்கள். அதோடு வாழைப்பூவையும் மோரிலிருந்து இறுத்து போட்டு வதக்கி எடுத்துக்கொள்ளுங்கள்.
அதில் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து முக்கால் பங்கு வேகும் வரை வதக்கி எடுத்துக்கொள்ளுங்கள்.
பின் மிக்ஸி ஜாரில் உரித்த சின்ன வெங்காயம், இஞ்சி, சோம்பு, மிளகு, பட்டை , தேங்காய் சேர்த்து மொர மொரப்பாக அரைத்துக்கொள்ளுங்கள்.
தற்போது வதக்கி வைத்துள்ள வாழைப்பூவையும் சேர்த்து ஒன்றும் பாதியுமாக அரைத்துக்கொள்ளுங்கள். பின் அதை ஒரு கிண்ணத்தில் வழித்து எடுத்துக்கொள்ளுங்கள்.
முந்திரி மற்றும் பொட்டுக்கடலையையும் மிக்ஸியில் மொரமொரப்பாக அரைத்து வாழைப்பூ மாவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
இப்போது அதில் தேவையான உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்கு பிசைந்துகொள்ளுங்கள். மாவு கெட்டிப் பதத்தில்தான் இருக்க வேண்டும்.
அவற்றை இப்போது சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எடுத்துக்கொள்ளுங்கள்.
இப்போது கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அந்த உருண்டைகளை பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
இப்போது அதை சாப்பிட்டு பாருங்கள்.. மட்டன் கோலா உருண்டை சுவையில் பிரமாதமாக இருக்கும்.
Comments