அசைவ குழம்பா என்று கேட்கும் வகையில் மிகவும் அருமையான சுவையில் இருக்கும் இந்த தக்காளி குருமா

 அசைவ குழம்பா என்று கேட்கும் வகையில் மிகவும் அருமையான சுவையில் இருக்கும் இந்த தக்காளி குருமாஇட்லி, தோசை, பூரி, சப்பாத்தி, பொங்கல் இன்னும் பல உணவு வகைகளுடன் சேர்த்து சாப்பிட இந்த தக்காளி குருமா மிகவும் அருமையாக இருக்கும். இதனை சுடசுட சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டாலும் அவ்வளவு சூப்பராக இருக்கும். இந்த குழம்பை சாப்பிடும் பொழுது கறி குழம்பை சுவைப்பது போன்று அசத்தலாக இருக்கும். சமைக்கும் போது அக்கம் பக்கத்து வீட்டாரும் நினைத்துக் கொள்வார்கள் இன்று உங்கள் வீட்டில் அசைவம் என்று. அந்த அளவிற்கு இதன் மணம் அனைவரையும் சுண்டி இழுக்கும். வாருங்கள் இந்த தக்காளி குருமாவை எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.


தேவையான பொருட்கள்: பெரிய தக்காளி – 6, சின்ன வெங்காயம் – 15, பூண்டு – 20 பல், இஞ்சி சிறிய துண்டு – 2, பட்டை சிறிய துண்டு – 2, கிராம்பு – 3, அன்னாசிப்பூ – 1, ஏலக்காய் – 2, சோம்பு – ஒரு ஸ்பூன், தேங்காய் – கால் மூடி, தனி மிளகாய் தூள் – அரை ஸ்பூன், தனியா தூள் – ஒன்றரை ஸ்பூன், மஞ்சள்தூள் – கால் ஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லி தழை – ஒரு கொத்து, உப்பு – ஒரு ஸ்பூன், எண்ணெய் – 4 ஸ்பூன்.


செய்முறை: முதலில் சின்ன வெங்காயம் மற்றும் பூண்டை தோல் உரித்து சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பிறகு தக்காளியை நான்கு துண்டுகளாக நறுக்கி வைக்க வேண்டும். பின்னர் இஞ்சியைத் தோல் சீவி வைத்துக்கொள்ள வேண்டும். அதன் பின் கால் மூடி தேங்காயை துருவி வைக்க வேண்டும்.


பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து, இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும், அதில் சோம்பு, 5 சின்ன வெங்காயம் மற்றும் பூண்டை சேர்க்க வேண்டும். பின்னர் இவற்றுடன் நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

பிறகு கிராம்பு, பட்டை, ஏலக்காய், அன்னாசி பூ, இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். எண்ணெயில் சேர்த்த அனைத்துப் பொருட்களும் நன்றாக வதங்கிய பின்னர், இவற்றுடன் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் தனியாத்தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.இந்த மசாலா காலை சேர்க்கும் பொழுது அடுப்பை சிம்மில் வைத்து கிளற வேண்டும்.


 பிறகு இறுதியாக தேங்காய் துருவல் சேர்த்து ஒரு கிளறு கிளறி விட்டு, அடுப்பை அனைத்து விட வேண்டும். இவை நன்றாக ஆறிய பின் இதனை மிக்ஸியில் சேர்த்து அரைத்துக் கொள்ளவேண்டும். பின்னர் மீண்டும் அடுப்பில் கடாயை வைத்து, எண்ணெய் ஊற்றி, அதில் மீதமுள்ள சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். பிறகு இதனுடன் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து, அதனுடன் தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து, நன்றாக கலந்து விடவேண்டும். 


குழம்பு ஒரு கொதி வந்ததும் அடுப்பை அனைத்துவிட வேண்டும். அவ்வளவுதான் சுவையான தக்காளி குருமா தயாராகிவிட்டது.Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,