'சார்பட்டா பரம்பரை'யில நானும் ஒருத்தன்.

 


எங்க வீட்டுல நான் எட்டாவது புள்ள. காமெடியா சொல்றதா இருந்தா வீட்ல இருந்து நான் தொலைஞ்சு போனாலே, என்னை கண்டுபிடிக்கவே ரெண்டு நாள் ஆகிடும். ஒரு காலத்துல ஃபிட்னஸ்க்காக கோல் சண்டை, பானா, சூரி கத்தி, பாக்ஸிங்னு பல கலைகள் விரும்பி கத்துக்கிட்டேன். அப்ப நான் ஹெவி வெயிட் பாக்ஸர். 'சார்பட்டா பரம்பரை'யில நானும் ஒருத்தன். இதை ஒருமுறை பா.இரஞ்சித் சார்கிட்ட சொன்ன போது, ஆச்சரியமானார். "முன்னாடியே இது தெரிஞ்சிருந்தா, அதுல உங்களையும் நடிக்க வச்சிருப்பேனே"னு சொன்னார்.

பாக்ஸிங் பிராக்டீஸ் பண்றப்ப பச்சையாவே 28 முட்டைகள் குடிப்பேன். 'சார்பட்டா' படத்துல பார்த்த கோச்சுகள் எல்லாருமே என்னோட இருந்தவங்கதான். இடையே கிடார் வாசிக்கவும் வகுப்புகள் போயிட்டிருந்தேன். ஒருத்தர் ஓசியில கத்துக்கொடுத்தார். கத்துக்கறது ரொம்ப பிடிக்கும். மிருதங்கமும் கத்துக்க ஆரம்பிச்சேன். ஏன்னா, ஒரு விஷயத்தை புதுசா கத்துக்கறது வாழ்க்கையில ரொம்ப சிறந்தா விஷயம். Learning is the best friend. எப்பவுமே நாம ஒரு Glass மாதிரி இருக்கணும். Mirror மாதிரி இருக்ககூடாதுனு நினைப்பேன். 'தெனாலி'யில நான் சிரிச்சுக்கிட்டே எல்லாரையும் அழ வைப்பேன். ரவிக்குமார் சொன்னதை அப்படியே பண்ணினேன்."
- மதன்பாப்
நன்றி: விகடன்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,