செட்டிநாடு ஸ்டைல் வேர்க்கடலை தண்ணி சட்னி!

 செட்டிநாடு ஸ்டைல் வேர்க்கடலை தண்ணி சட்னி! இப்படி ஒரு முறை செஞ்சு பாருங்க, ருசியே வித்தியாசமாக இருக்கும்.





செட்டிநாடு ஸ்டைல் வேர்கடலை தண்ணி சட்னி ரொம்பவே வித்தியாசமான சுவையை கொடுக்கக் கூடியது ஆகும். சட்டுனு பத்து நிமிடத்தில் நம் வீட்டிலேயே செய்து சுடச்சுட இட்லி, தோசையுடன் பரிமாறினால் அம்புட்டு இட்லியும் காலியாகிவிடும்! ருசியான செட்டிநாடு ஸ்டைல் வேர்க்கடலை சட்னி எப்படி செய்வது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.


வேர்க்கடலை தண்ணி சட்னி செய்ய தேவையான பொருட்கள்: வறுத்த வேர்க்கடலை – அரை கப், சீரகம் – அரை டீஸ்பூன், பூண்டு பல் – 4, கறிவேப்பிலை  ஒரு கொத்து, பச்சை மிளகாய் – 3, உப்பு – தேவையான அளவு, புளி – சிறு நெல்லிக்காய் அளவு. தாளிக்க: கடுகு – அரை டீஸ்பூன், வரமிளகாய் – 3, கறிவேப்பிலை – ஒரு கொத்து.


வேர்க்கடலை தண்ணி சட்னி செய்முறை விளக்கம்: முதலில் வேர்க்கடலையை வறுத்த வேர்க்கடலை ஆக எடுத்துக் கொள்ள வேண்டும். ஏற்கனவே வறுத்து வைத்துள்ள வேர்கடலையை மீண்டும் ஒருமுறை எண்ணெயில் வறுக்க வேண்டும். வாணலியை அடுப்பில் வைத்து அதில் அரை கப் அளவிற்கு தோலுடன் இருக்கக் கூடிய வேர்க்கடலையை போட்டு கொள்ளுங்கள். இந்த சட்னிக்கு வேர்க்கடலை தோலை உரிக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு லேசாக வாசம் வர வறுத்து ஆற வைத்துக் கொள்ளுங்கள்.


பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளுங்கள். அதே வாணலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு சீரகம் சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள். ஒரு கொத்து கறிவேப்பிலையை உருவிப் போட்டு கொள்ளுங்கள். 4 பூண்டு பற்களை தோலுரித்து சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள். காரத்திற்கு 3 பச்சை மிளகாய்களை கீறி சேர்த்து வதக்குங்கள். இப்போது சட்னிக்கு தேவையான உப்பு சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.


புளிப்பு சுவைக்கு சிறு நெல்லிக்காய் அளவிற்கு புளியை உருட்டி சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த எல்லாப் பொருட்களும் நன்கு வதங்கிய பின்பு அடுப்பை அணைத்து ஆற வைத்து விடுங்கள். ஆறிய பின்பு வேர்க்கடலை மற்றும் வறுத்த பொருட்கள் அத்தனையையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து நைஸாக அரைத்து எடுக்க வேண்டும். மிக்ஸி ஜாரை கழுவி அந்த தண்ணீரையும் இதில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

இந்த வேர்க்கடலை தண்ணீர் சட்னி கொஞ்சம் தண்ணீராக நீர்க்க இருக்க வேண்டும், அப்போது தான் சுவையாக இருக்கும். எனவே தேவையான அளவிற்கு தண்ணீரைச் சேர்த்துக் கொள்ளலாம். பின்இதற்கு ஒரு சிறு தாளிப்பு கொடுக்க வேண்டியது தான். அதற்கு அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு தாளிப்பு கரண்டியை வைத்துக் கொள்ளுங்கள்.


அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி நன்கு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்ததும் வரமிளகாயை கிள்ளி சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு கொத்து கறிவேப்பிலையை தாளித்து படபடவென பொரிந்து வரும் போது அடுப்பை அணைத்து சட்னியுடன் கொட்டி விடுங்கள். ரொம்பவே வித்தியாசமான ருசியை கொடுக்கும் இந்த செட்டிநாடு ஸ்டைல் வேர்க்கடலை தண்ணி சட்னி இப்போது தயார்

thanks:

deiveegam com

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,