இந்தியர்களுக்கு தனிமை இல்லா தாராள அனுமதி கொடுத்த சிங்கப்பூர்

 

இந்தியர்களுக்கு தனிமை இல்லா தாராள அனுமதி கொடுத்த சிங்கப்பூர்: தமிழகத்தில் கூடுதல் விமான நிலையங்கள் சேர்ப்பு!





India VTL Flights Singapore: தடுப்பூசி போட்டுக்கொண்ட இந்திய பயணிகளுக்கு தனிமை இல்லா VTL சேவை வரும் மார்ச் 16 முதல் ஆரம்பம் ஆகிறது.

அதாவது சென்னை, டெல்லி மற்றும் மும்பை மட்டுமல்லாமல் அனைத்து இந்திய நகரங்களையும் உள்ளடக்கியதாக இந்த VTL சேவை இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், தமிழ்நாட்டின் திருச்சி, கோவை மற்றும் அமிர்தசரஸ், திருவனந்தபுரம் மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய ஐந்து நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு ‘VTL’ விமான சேவை வழங்கப்படும் என்று Scoot அறிவித்துள்ளது.

அதன்படி, வரும் மார்ச் 15ஆம் தேதி முதல் திருச்சி, திருவனந்தபுரம் ஆகிய நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு இரு மார்க்கத்தில் இருந்தும் ‘VTL’ விமான சேவை வழங்கப்படும்.

கோவை, அமிர்தசரஸ், விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு இரு மார்க்கத்தில் இருந்தும் வரும் மார்ச் 16- ஆம் தேதி முதல் ‘VTL’ விமான சேவை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘திருச்சி, கோவை உள்பட ஐந்து நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு ‘VTL’ விமான சேவை’- ஸ்கூட் ஏர்லைன்ஸ் அறிவிப்பு!


Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி