மானுடம் வென்றதம்மா!

 மானுடம் வென்றதம்மா!

*


உலக எழுத்தாளர்கள் தினத்தில் எழுத்தையும் எழுதுகோளையும் தெய்வம் என்றோதிய மகாகவிகளை வணங்குகிறேன்.


சக மனிதரின் கண்ணீரைத் துடைக்கும்  விரல்களாய் நீளும் கருணை மிக்க எழுத்துகோள்களைப் போற்றுகிறேன்.


உண்மைக்காகப் போராடும்  உயர்ந்த நோக்கத்தோடு 

ஒலிம்பிக் ஜோதியை ஏந்துவது போல் எழுத்துக்களை ஏந்தி ஓடும்  எழுத்தாளர்களைத் தொழுகிறேன்.


காலத்தை வெல்லும் படைப்பாக்கத்தால் கடவுளின் அரியாசனத்துக்குச் சரியாசனம் கொண்டு உயர்ந்து நிற்கும்  முன்னோடிகளைப் பாடுகிறேன்.


அவர்களின் கனிகளை உண்டு அக்கனிகளின் விதைகளைச் சூல் கொண்டு எம் எழுத்தும் சிறக்கட்டும் என்று வேண்டுகிறேன்.


போர் ஒழியட்டும்.

அன்பின் ஈரம் எங்கும் பரவட்டும்.


மானுடம் வெல்லட்டும்.  மதம் கடந்து மனிதம் செழிக்கட்டும்.


சின்னச் சின்ன வட்டங்கள் விட்டு வெளியேறி

எல்லையொன்றில்லா விரிவை மனங்கள் காணட்டும்.


பச்சை வயலாக

பனிமலைச் சிகரமாக


பொங்கும் நதியாக

பூப்பூக்கும் காடாக


பறவைகள் இசைபாட

விலங்கினம் உடன்வாழ


ஐம்பூதங்களும் அரசாள

அனைவரும் நிழல் காண


உலகம் உய்யத்தான்

எழுத்தால் வேண்டுகிறேன்.


எண்ணியவை நிறைவேற எழுத்தே துணை.

*

 - பிருந்தா சாரதி


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,