இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட கொஞ்சம் வித்தியாசமான இந்த கதம்ப சட்னி

 இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட கொஞ்சம் வித்தியாசமான இந்த கதம்ப சட்னியை ஒரு முறை ட்ரை செய்து பாருங்கள்


 இதனை செய்வது தான் சற்று எளிமையான வேலையாக முடியும். எனவே அவசரத்திற்கு பயன்படுத்திக் கொள்ள இந்த சட்னி வகைகளை தான் அனைவரும் செய்வதுண்டு. ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக இப்படி இந்த பொருட்கள் அனைத்தையும் சேர்த்து செய்யும் பொழுது இதன் கலவை நல்ல நறுமணத்தையும், நல்ல சுவையையும் கொடுக்கிறது. அதுமட்டுமல்லாமல் இந்த சட்னி உடம்பிற்க்கும் நல்ல ஆரோக்கியத்தைக் கொடுக்கிறது. இவ்வாறு சுவையான கதம்ப சட்னியை நீங்களும் ஒருமுறை செய்து இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிடுங்கள். இதன் சுவை அனைவரையும் அதிகமாக சாப்பிட தூண்டும். வாருங்கள் இந்த சட்னியை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.


தேவையான பொருட்கள்:

 சின்ன வெங்காயம் – 20, தக்காளி – 2, பெரிய வெங்காயம் – 1, பச்சை மிளகாய் – 4, வரமிளகாய் – 6, பூண்டு – 10 பல், இஞ்சி சிறிய துண்டு – 1, புளி – சிறிய நெல்லிக்காய் அளவு, வெல்லம் – ஒரு ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, புதினா – ஒரு கைப்பிடி, கொத்தமல்லி தழை – ஒரு கைப்பிடி, உப்பு – ஒரு ஸ்பூன், எண்ணெய் – 4 ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன்.


செய்முறை: முதலில் சின்ன வெங்காயம் அனைத்தையும் தோலுரித்து சுத்தமாக கழுவி வைக்க வேண்டும். அதேபோல் 10 பல் பூண்டை தோலுரித்து வைக்க வேண்டும். பிறகு கொத்தமல்லி, புதினா இவற்றை கிள்ளி வைத்து, தண்ணீரில் அலசி வைக்க வேண்டும். பிறகு தக்காளியை நான்கு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து, 3 ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் 15 சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து வதக்க வேண்டும். பிறகு இரண்டு நிமிடம் வதங்கியதும் அதனுடன் பச்சை மிளகாய் மற்றும் வரமிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.


பிறகு இஞ்சியை பொடியாக நறுக்கி சேர்த்து அனைத்தையும் நன்றாக வதக்க் கொள்ளை வேண்டும். பிறகு இதனுடன் நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து கலந்து விட்டு, புதினா, கொத்தமல்லி, கருவேப்பிலை இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.


பிறகு சேர்த்துள்ள தக்காளி நன்றாக பதிந்து வேகும் வரை வதக்கிய பின்னர், ஒரு ஸ்பூன் உப்பு மற்றும் ஒரு ஸ்பூன் வெல்லம் சேர்த்து கலந்து விட்டு, அடுப்பை அனைத்து விட வேண்டும். இதனை நன்றாக ஆற வைத்து, அதன் பின் மிக்ஸியில் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு தாளிப்பு கரண்டியை அடுப்பின் மீது வைத்து, ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, அதில் கடுகு, சீரகம் மற்றும் 5 சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கி, இதனுடன் சேர்த்தால் போதும். சுவையான கதம்ப சட்னி தயாராகிவிடும்.


Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி