Tuesday, March 1, 2022

கொல்லிமலை அறப்பளீஸ்வரர் திருக்கோயில் /ஆன்மிக உலா

 இன்றைய ஆன்மிக உலா


கொல்லிமலை அறப்பளீஸ்வரர் திருக்கோயில் கொல்லிமலை அறப்பளீஸ்வரர் திருக்கோயில் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும். இது ஒரு தேவார வைப்புத்தலமாகும்

சங்க காலத்தில் கொல்லிமலையானது சதுரகிரி என்றும், தர்மதேவதை கொல்லி மலையாக இருப்பதால் ’அறமலை’ என்றும் அழைக்கப்பட்டது. அம்பலவாண கவிராயர் இத்தலத்து இறைவன் மீது அறப்பளீஸ்வரர் சதகம் என்ற நூலை இயற்றியுள்ளார். திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் தமது தேவாரப் பாடல்களில் கொல்லிமலை பற்றி குறிப்பிட்டுள்ளனர். இத்தலத்து சிவபெருமான் சுயம்பு மூர்த்தி. இறைவன் அறப்பளீஸ்வரர், அன்னையின் பெயர் அறம்வளர்நாயகி என்பதாகும். அறை என்றால் மலை, பள்ளி என்றால் தங்கியிருப்பவர் என்று பொருள். மலையின்மீது ஆலயம் அமைந்துள்ளதால் அறைப்பள்ளீஸ்வரர் என்று இறைவன் அழைக்கப்பட்டார். ஆனால் காலப்போக்கில் இப்பெயர் மருவி அரப்பளீஸ்வரர் என்று தற்போது மக்களால் அழைக்கப்படுகிறார்.

தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் இக்கோவிலில் உள்ள கல்வெட்டுக்களில் பல சோழர் காலத்தைச் சேர்ந்தவை எனக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இங்கே தொல்பொருள் ஆராய்ச்சியின் போது பழங்கால கல்லறைத் தோட்டம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அறப்பலீஸ்வரர் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்படும் சிவலிங்கம் ஒரு விவசாயி நிலத்தை உழும் போது எதேச்சையாகக் கண்டுபிடிக்கப்பட்டதாகும். கண்டுபிடிக்கப்பட்ட சமயத்தில் ஏரால் அடிபட்ட அந்த லிங்கத்தில் இருந்து ரத்தம் கசிந்ததாகவும் அந்த காயம் இன்றளவும் அந்த லிங்கத்தில் காணப்படுவதாகவு 


இக்கோயிலுக்குப் பக்கத்தில் "மீன்பள்ளி" ஆறு ஓடுகிறது; இம்மீன்பள்ளியாற்றில், இறைவன் மீன்களின் வடிவில் விளங்குவதாக ஐதீகம். எனவே மீன்களுக்கு பழம், தேங்காய் வைத்துப் படைத்து, அவற்றுக்கு உணவு தரும் பழக்கம் பண்டை நாளில் இருந்து வந்துள்ளது. இதன்பின்னரே அறைப்பள்ளிநாதருக்கு பூசை நிகழுகிறது.


தஞ்சை பெருவுடையார் கோயில் கட்டிய ராஜராஜ சோழனின் பெரிய பாட்டியும், சிவஞான கண்டராதித்த சோழ தேவரின் மனைவியுமான செம்பியன் மாதேவி, விஜயநகர அரசர் வேங்கடபதி, சோழ மன்னர்கள் பராகேசரிவர்மன், குலோத்துங்க சோழன், பராந்தக சோழன்.


இத்தலத்தல தீர்த்தத்தில் உள்ள மீன்களைப் பக்தர்கள் ஒருமுறை சமைக்க, அவை உயிர்பெற்று நதியில் குதித்ததால் அறுத்த மீனை பொருத்தி உயிர்ப்பித்த அறப்பளீஸ்வர் என்று இங்குள்ள சிவபெருமான் வழங்கப்படுகிறார்


கோவிலின் அருகில் ஆகாய கங்கை அருவி உள்ளது.கோரக்க சித்தர், காலாங்கிநாத சித்தர் ஆகியோர் தங்கியிருந்த குகைகள் அருவிக்கு சற்று தூரம் தள்ளி அமைந்துள்ளன


ஓரி மன்னர் அரசாண்ட பகுதியாதலால் கோவிலிலிருந்து 11 கி.மீ தொலைவில் உள்ள செம்மேடு பகுதியில் அம்மன்னனுக்கு சிலை உள்ளது. ஆடிப்பெருக்கன்று விழா எடுக்கப்படும். மலைவாழ் மக்கள் நிகழ்ச்சிகளும் நடைபெறும்

ஆடி 18ம் பெருக்கு, மகா சிவராத்திரி, நவராத்திரி உற்சவம், திருக்கார்த்திகை தீபம், அன்னாபிஷேகம், திருவாதிரை. இத்தலத்தில் பிரதோஷம், பவுர்ணமி, அமாவாசை, ஆருத்ரா தரிசனம் என விழாக்கள் கொண்டாடப்பட்டாலும், ஆடி 18ம் பெருக்கு திருவிழா இத்தலத்தின் தலையாய வருட முக்கிய வைபவம் ஆகும். ஆடி 15 அன்று கொடியேற்றத்துடன் துவங்கி, அபிஷேகம், திருக்கல்யாணம், சுவாமி புறப்பாடு, மஞ்சள் நீராட்டு, கொடியிறக்கம் என ஐந்து நாட்களும் பெருவிழா காலங்கள் தான். கொல்லிமலையில் உள்ள அத்தனை ஊர்களில் இருந்தும் பக்தர்கள் பெருந்திரளாக கலந்து கொள்வர். மேலும் இங்கு வாழும் பூர்வ மலைவாழ் மக்கள் தமக்கே உரித்தான பல வண்ண உடைகளில் கலந்து கொண்டு கொண்டாடுவது கண்களுக்கு விருந்தாக அமையும்.
தல சிறப்பு:

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சிவலிங்கத்தின் உச்சியில் கலப்பை மோதியதால் ஏற்பட்ட தழும்பு காணப்படுகிறது. ஒரே இடத்தில் நின்று ஒரே நேரத்தில் அறப்பளீஸ்வரர், தாயம்மை, விநாயகர், முருகன் ஆகிய நான்கு தெய்வங்களையும் ஒரு சேர தரிசித்து மகிழும் அரிய அமைப்பு இக்கோயிலின் தனிச்சிறப்பாகும். அறம்வளர்த்தநாயகி சன்னதி முன்மண்டபத்தின் மேற்பகுதியில் அஷ்ட லட்சுமிகளுடன் கூடிய ஸ்ரீசக்ர யந்திரம் உள்ளது. இதன் கீழே நின்று வழிபட லட்சுமி கடாட்சம் கிடைக்கும்.

பிரார்த்தனைதிருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.குடும்பப்பிரச்னையால் பெற்றோரைப் பிரிந்தவர்கள், தாய், மகன் இடையே மனக்கசப்பு உள்ளவர்கள் இங்கு வேண்டிக்கொள்ள மீண்டும் சேர்வர் என்பது நம்பிக்கை. நீதி கிடைக்க இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.இயற்கை அன்னையின் அழகை ஒட்டு மொத்த குத்தகைக்கு எடுத்து கொண்ட மலை அழகுகளில் கொல்லிமலை சிறப்பு பெற்றது. தன் அழகை 17 மைல் தூரத்திற்கு விரித்திருக்கும் இந்த மலை ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழமையும், வரலாற்று சிறப்பும் உடையது.

மூலவர்: அறப்பளீஸ்வரர், அறுத்த மீனை பொருத்தி உயிர்ப்பித்த அறப்பளீஸ்வர், திருவரப்பள்ளியுடையார், ஆருஷ லிங்கம்,தாயார்: அறம் வளர்த்த நாயகி, தாயம்மை

தீர்த்தம்: பஞ்சநதி


திறக்கும் நேரம்:

காலை 7 மணி முதல் 1 மணி வரை, பகல் 2.30 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும். திருவிழா நாட்களில் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை நடை திறந்திருக்கும்.


முகவரி:

அருள்மிகு அறப்பளீஸ்வரர் திருக்கோயில் , கொல்லிமலை –நாமக்கல்  மாவட்டம்.

--உமாதமிழ்

வர்ணனை :ரேகாகாந்தன்


video linkNo comments:

Featured Post

தாய் சமயபுரம் மாரியம்மனின் வரலாறு ||sumis channel/

  தாய் சமயபுரம் மாரியம்மனின் வரலாறு | சமயபுரத்தாளின் சிறப்புகள்|Samayapuram Varalaru |sumis channel video link