கூகுள் அறிமுகம் செய்யவுள்ள புதிய தொழில்நுட்பம்

 

கூகுள் அறிமுகம் செய்யவுள்ள புதிய தொழில்நுட்பம்- இனி டச் ஸ்கிரீன் எல்லாம் தேவையில்லை.


கூகுள் நிறுவனம் புதிய தொழில்நுட்பம் ஒன்றிருக்கு காப்புரிமை கோரியுள்ளது. இந்த தொழில்நுட்பத்தில் நமது சருமத்தை தொடுவதன் மூலம் ஸ்மார்ட் சாதனங்களை கட்டுப்படுத்த முடியும் என தெரிவித்துள்ளது.

‘ஸ்கின் இன்டர்ஃபேஸ்’ என இந்த தொழில்நுட்பத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் வாட்ச்சை பயன்படுத்தும் பயனர்கள் வாட்சின் திரையை தொடாமல் வாட்ச் பக்கத்தில் உள்ள சருமத்தை தொட்டால் போதும். அதன் மூலம் நமக்கு வரும் அழைப்புகளை அட்டெண்ட் செய்ய முடியும், சத்தத்தை அதிகரிக்க முடியும், செட்டிங்ஸை மாற்ற முடியும்.
அதேபோல காது பக்கத்தில் தொடுவதன் மூலம் இயர்பட்களையும் கட்டுப்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில் இந்த தொழில்நுட்பம் கூகுள் சாதனத்தில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,