மத்திய அரசின் தங்கத் தாமரை விருது பெற்ற முதல் தமிழ்படம் - சம்சாரம் அது மின்சாரம்.

 தமிழ் சினிமாவில் மத்திய அரசின் தங்கத் தாமரை விருது பெற்ற முதல் படம் - சம்சாரம் அது மின்சாரம்.


விருது அறிவிக்கப்படும் முன்பு விசுவை அழைத்துத் தகவல் சொல்லியிருக்கிறார் சரவணன். இன்று மாலை அறிவிக்கிறார்கள். அதுவரை வெளியே சொல்லவேண்டாம்.
உற்சாகமான விசு, அதெப்படி யாருக்கும் சொல்லாமல் இருக்கமுடியும். மூன்று பேருக்கு நான் சொல்வேன். என் மனைவி, தம்பி மற்றும் பாலசந்தர் என்று கூறினார். சரி, ஒருவேளை விருது கிடைக்காவிட்டாலும் மூன்று பேரும் ஏமாற்றமடைய மாட்டார்கள் என்பதால் அவர்களிடம் விஷயத்தைச் சொல்லி ரகசியமாக வைத்துக்கொள்ளச் சொல்லவும் என்றார் சரவணன்.
முதலில் மனைவிக்கும் பிறகு தம்பிக்கும் அடுத்ததாக பாலசந்தருக்கும் தகவல் கூறினார் விசு. நான் வாங்கியிருந்தால் கிடைத்த சந்தோஷத்தை விடவும் நீ வாங்கியதில் சந்தோஷம் என்று வாழ்த்தினார் கே.பி.
தூர்தர்ஷன் தொலைக்காட்சி மட்டும் இருந்த காலகட்டம் அது.
நாடக நடிகரும் செய்தி வாசிப்பாளருமான டிவி வரதராஜன் அன்றைய தினம் விசுவுக்கு போன் செய்தார். எதுவாக இருந்தாலும் இரவு 8 மணிக்கு மேல் பேசலாம் என்று அவரிடம் கூறியிருக்கிறார் விசு. தேசிய விருது குறித்த தகவலுக்காகக் காத்திருப்பதால் தூர்தர்ஷன் செய்திகளில் அதனைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்பு யாரிடமும் பேசவேண்டாம் என எண்ணி அப்படிச் சொன்னார் விசு. ஆனால், எதுவாக இருந்தாலும் நான் 7.30 மணிக்கு முன்பு சொல்லியாக வேண்டும் என்று விசுவிடம் கூறினார் வரதராஜன். ஏனெனில் அன்றைக்கு தூர்தர்ஷனில் செய்தி வாசிக்க வேண்டியது அவர் தான். வரதராஜனின் கையில் செய்திகள் அடங்கிய தாள் இருந்தது. அதில் தேசிய விருது குறித்த செய்தி இருந்ததால் அன்றைய செய்தியை வாசிப்பதற்கு முன்பு விசுவிடம் தகவலைச் சொல்லி முன்கூட்டியே வாழ்த்து தெரிவிக்க போன் செய்துள்ளார். இது உறுதியான தகவல். நான் இதைச் செய்தியாக வாசிக்கப் போகிறேன் என்று கூறினார் வரதராஜன்.
நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் விசு இவ்வாறு கூறினார்: தமிழுக்குத் தங்கத் தாமரை விருது கிடைக்கவேண்டும் என்று கனவு கண்ட இயக்குநர்களில் 95% பேர் எனக்கு போன் பண்ணி வாழ்த்தவில்லை. இத்தனைக்கும் சங்கத்தில் எல்லோரும் நண்பர்கள்தாம். நமக்குக் கிடைக்கலையே எனச் சில பேர். இவனுக்குக் கிடைச்சிருக்கே எனச் சில பேர் இருந்திருக்கலாம் என்கிறார்.
நன்றி: தினமணி

Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி