சேவல் நள்ளிரவில் கூவினால் மட்டும் பொழுது விடிந்து விடுமா/கட்டுரை/மகளிர் தினம்2022,

 அனைத்து மகளிருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்..



 மன்னிக்கவும் இந்த தினத்திற்கு வாழ்த்து சொல்லும் பொழுது கூட பெண்கள் மதிக்கபடுகின்றனரா? என்பதே என் மனநிலை..


பெண் என்ற ஆக்க சக்தி இல்லை என்றால் புவி. இயங்காது..


மங்கையராய் பிறந்தட மாதவம் செய்திட வேண்டுமாம்..


இந்த உலகத்திற்கு பெண்கள் மீது மரியாதை பெண்கள் தினம் அன்று, அன்னையர் தினம் என்று குறிப்பிட்ட தினங்களில் தான் நியாபகம் வருகிறது..


பிறக்கும் பிள்ளை பெண்ணாய் பிறந்தாள் " பொம்பள பிள்ளையா " என கேட்கும் வழக்கம் மட்டும் இந்த நவீன உலகத்திலும் சில ஆணாதிக்கத்தை வளர்க்கும் மனோபாவாம் கொண்ட பெண்களிடம் மாறவில்லை..


இதை விட விசித்திரங்களும் இருக்கிறது.. ஆண் குழந்தை தான் பிறக்க வேண்டும் என்ற ப்ரார்த்தனைகள் வேறு..


ஆனால் தாம்பூலம் கொடுத்து தங்கள் குலம் செழிக்க தங்களை வாழ்த்த ஒரு பெண் பிள்ளை வேண்டும்.. வணங்கும் தெய்வம் பெண் தெய்வம், வரம் கேட்டு செல்வதற்கு பெண் தெய்வம் வேண்டும் ஆனால்  பெண் குழந்தை மட்டும் வேண்டாம்..


இத்தனையும் செய்துவிட்டு தன் மகனுக்கு திருமணம் வயது வரும் சமயம் மட்டும் பெண் தேவைப்படுகிறாள் இவர்களுக்கு..


பெண் என்பவள் ஆக்க சக்தி.. இன்னும் சொல்ல போனால் *யானைக்கு தன் பலம் தெரியாமல் அங்குசத்திற்கு கட்டு பட்டு இருக்குமாம்*..


அதே யானைக்கு தன் பலம் தெரியும் நிலை வந்தால் எதிரில் சிங்கம் கூட நிற்க இயலாது..


வீரத்திற்கு எடுத்துக்காட்டாய் சொல்லபடும் விலங்குகளில் சிங்கத்தில் கூட பெண் சிங்கம் தான் பெரிய போரிட்டு எதிரியை வீழ்த்தி தன் குட்டிகளுக்கு உணவு அளிக்குமாம்..


பெண்ணை எந்த ஒரு ஆணும் குறைத்து மதிப்பிடுவதில்லை.. பெண்ணை பெண்ணே தான் குறைத்து மதிப்பிடுகின்றனர் என்பதே வேதனை..


பிறக்கும் குழந்தை ஆணோ பெண்ணோ உலகிற்கு நல்லது செய்பவர்களாக இருக்க வேண்டும்..


மாறாக ஏதோ பிறந்தோம் வளர்ந்தோம் என இல்லாது ஆண் பிள்ளகளை பெற்றவர்கள் முறையே வளர்க்க வேண்டும்..


எத்தனை சமூக குற்றங்கள்.. அனைத்திற்கும் காரணம் ஆண் என சொல்ல மாட்டேன்.. அவனை வளர்த்த பெண்ணே காரணம்..


பெண்ணே ஒரு பெண்ணை அவமதிக்கும் ஒவ்வொரு வினாடியும் *கண்ணாடி கூண்டிற்குள் நின்று நீ கல் வீசுகிறாய் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்*..


அன்னையர் தினம் மகளிர் தினம் இட ஒதுக்கீடு என்றெல்லாம் பெண்ணை சிறப்பிக்க வேண்டாம்.. பெண்ணை பெண்ணாய் மதிக்க ஆண் பிள்ளைகளுக்கு கற்று கொடுங்கள்..


ஒரு பெண் தன் கருத்தை தைரியமாக சொல்லும் பொழுது அவளை பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை புறம் பேசாது இருங்கள்..


*இன்றைய பெரும்பாலான முதியோர் இல்லம் இருப்பதற்கு காரணம் ஆணாதிக்கத்தை வளர்த்த பெண்களாலேயே* கர்மா பலம் வாய்ந்தது ஆயிற்றே!..


பெண் தானே.. பெண் கோழி கூவியாய் பொழுது விடிய போகிறது என கேட்பவர்களுக்கு ஒரு கேள்வி ?  " சேவல் நள்ளிரவில் கூவினால் மட்டும் பொழுது விடிந்து விடுமா? என்ன..


 இயற்கை விதிபடி  ஆணும் சரி பெண்ணும் சரி .. சரிசமமே.. 



பெண்ணை போற்றும் பெண்ணை மதிக்கும் அனைத்து ஆண்களுக்கும், அவர்களின் மகளிர் தின வாழ்த்து செய்திகளை சிரம் தாழ்ந்து வணங்கி ஏற்று கொள்கிறேன் அவர்களின் மகளாய், சகோதரியாய்... 



பெண்ணின் வளர்ச்சியை புறம் பேசாமல், பெண்களை ஏளனாய். குறைத்து மதிப்பிடாத  அனைத்து மகளிருக்கும் என் மகளிர் தின வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவித்து கொள்கிறேன்..



நட்புடன்,

ஜெயந்தி சதீஷ், 


ஸ்ரீவில்லிபுத்தூர்.,


Comments

Rajkumar said…
Super Jey.. Happy Women's day.. long way to go..💐

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,