வாழைக்காய் வடை செய்வது எப்படி

 10 நிமிடத்தில் மிக மிக சுவையான வாழைக்காய் வடை செய்வது எப்படி? டீ குடிக்கும்போது இந்த வடை சூப்பரா இருக்கும்



கொஞ்சம் மொறுமொறுவென கொஞ்சம் காரசாரமான வடையை டீ குடிக்கும் போது ஒரு கடி கடித்துக் கொண்டால் தனி சுகம் தான். வாழைக்காயை வைத்து சுட சுட வடை எப்படி செய்வது என்பதைப்பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். மிக மிக சுலபமான முறையில் உங்கள் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே இந்த வடையை சுட்டு அசத்தலாம். வாங்க நேரத்தைக் கடத்தாமல் ரெசிபியை பார்ப்போம்.

முதலில் 2 வாழைக்காய்களை எடுத்துக்கொள்ள வேண்டும். கெட்டியாக காயாக இருக்கக் கூடிய வாழை காய்களாகப் பார்த்து எடுத்துக் கொள்ளுங்கள். வாழைக்காயை ஓரளவுக்கு பெரிய துண்டுகளாக வெட்டி குக்கரில் போட்டு தண்ணீர் ஊற்றி 3 விசில் விட்டு வேக வைத்துக் கொள்ள வேண்டும்‌‌. ஒரு பெரிய வாழைக்காயை மூன்று துண்டுகளாக வெட்டி வேக வைத்து கொண்டால் போதும்.


வாழைக்காய் வெந்து குக்கரில் விசில் அடங்கியதும், வெந்த வாழைக்காய்களை தண்ணீரில் இருந்து தனியாக எடுத்து தோலை உரித்தால் சுலபமாக பிரிந்து வந்துவிடும். இந்த வாழைக்காய்களை ஒரு துருவலில் துருவி எடுத்துக் கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் உங்கள் கையாலேயும் மசித்து ஒரு பௌலில் போட்டுக் கொள்ளலாம். அது நம்முடைய விருப்பம் தான்.


வேக வைத்து மசித்த வாழைக்காய்  ஒரு கிண்ணத்தில் உள்ளது. இப்போது அதில் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 1, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்  2, மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன், சீரகத்தூள் – 1/4 ஸ்பூன், ரவை – 1 ஸ்பூன், அரிசி மாவு – 1 ஸ்பூன், தேவையான அளவு உப்பு, பொடியாக நறுக்கிய இஞ்சி துருவல் – 1 ஸ்பூன், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை கொத்தமல்லி தழை, சேர்த்து உங்கள் கையைக் கொண்டு இந்த மாவை நன்றாக கலந்து கொடுங்கள்.

இந்த கலவை கொஞ்சம் ட்ரையாக இருக்கும். லேசாக 2 டேபிள்ஸ்பூன் அளவு தண்ணீரைத் தெளித்து இந்த மாவை வடை விடும் பக்குவத்தில் பிசைந்து கொள்ள வேண்டும். தயாரான மாவை சிறிய சிறிய உருண்டைகளாக எடுத்து உள்ளங்கைகளில் வைத்து வடை போல தட்டி அப்படியே நிறைய எண்ணெயில் விட்டு இரண்டு பக்கமும் பொன்னிறமாக சிவக்க வைத்து எடுத்துக் கொண்டாலும் சரி. அப்படி இல்லை என்றால் ஒரு பேனில் கொஞ்சமாக எண்ணெய் ஊற்றி இதை கட்லெட் போல ஷாலோ ஃப்ரை செய்து கொண்டாலும் சரி. அது நம்முடைய விருப்பம் தான்.


மொறுமொறுவென இந்த வாழைக்காய்களை எண்ணெயில் போட்டு சிவக்க வைத்து எடுத்து சுட சுட பரிமாறுங்கள். அட்டகாசமான சுவையில் இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்




Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,