தமிழ்ச்செம்மல் முனைவர் மரியதெரசா எழுதிய 100 நூல்கள் வெளியீட்டு விழா

 தமிழ்ச்செம்மல் முனைவர் மரியதெரசா எழுதிய 100 நூல்கள் வெளியீட்டு விழாதமிழ்ச்செம்மல் முனைவர் மரியதெரசா எழுதிய 100 நூல்கள் வெளியீட்டு விழா கடந்த 30.03.2022 அன்று புதன்கிழமை மாலை சுமார் 4.30 மணியளவில் சென்னை எழும்பூரில் உள்ள இக்சா மையத்தில் சிறப்புடன் நடைபெற்றது. விழாவில் வேலூர் விஐடிபல்கலைக்கழகத்தின் வேந்தர் மற்றும் நிறுவனர், தமிழியக்கத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் கல்விக்கோ கோ.விசுவநாதன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு 100 நூல்களை வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார். இலண்டனைச் சேர்ந்த ஸ்கில்பீடியா பி.லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர் திருமதி ராஜேஸ்வரி அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு முதல் 100 பிரதிகளைப் பெற்று சிறப்புரையாற்றினார். 

மேலும் இவ்விழாவில் கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியின் நெறியாளர் மற்றும் வெளியீட்டுப் பிரிவு செய்தியாளர் திரு.இரா.சரவணன் மற்றும் நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் முதன்மைச் செய்தியாளர் திரு.பாலவேல் சக்திவேல் அவர்களும் வாழ்த்துரை வழங்கினர். 

திருத்தணியைச் சேர்ந்த தளபதி கே.விநாயகம் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் உதவிப் பேராசிரியை முனைவர் ந.சு.பாக்யலக்ஷ்மி வேணு அவர்கள் 100 நூல்களின் மதிப்புரையை வழங்கினார்.

முதலாவதாக மலர்க்கண்ணன் பதிப்பகத்தின் பதிப்பாசிரியர் கவிஞர் க.மணிஎழிலன் வரவேற்புரை வழங்க, 100 நூல்களின் நூலாசிரியர் தமிழ்ச்செம்மல் முனைவர் மரியதெரசா அவர்கள்  நன்றியுரையும் ஏற்புரையும் வழங்கினார். விழாவில் எழுத்தாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,