அரசு பேருந்துகளில் பெண்களுக்கு 2 லோயர் பெர்த் ஒதுக்கீடு

 

ஆரம்பத்திலேயே அசத்தும் அமைச்சர் சிவசங்கர்.. அரசு பேருந்துகளில் பெண்களுக்கு 2 லோயர் பெர்த் ஒதுக்கீடுஅரசு போக்குவரத்து கழகத்தில் படுக்கை வசதி கொண்ட பேருந்துகளில் பெண்களுக்கு தனியாக லோயர் பெர்த் படுக்கை வசதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. படுக்கை எண் 1LB மற்றும் 4LB ஒதுக்கீடு செய்து இணையத்தில் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு மே மாதம் திமுக அரசு பொறுப்பேற்றது. திமுக தலைவர் மு .க. ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற பின் நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் என்ற சிறப்பு திட்டத்தை அறிவித்தது . இதன் மூலம் பெண் பயணிகளின் எண்ணிக்கை முன்பை காட்டிலும் அதிகரித்துள்ளதாக சட்டப்பேரவையில் போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அரசு விரைவு பேருந்துகளில் பெண்களுக்கு என இரண்டு பிரத்தியேக படுக்கைகளை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு போக்குவரத்து கழகத்தில் படுக்கை வசதி கொண்ட பேருந்துகளில் பெண்களுக்கு தனியாக படுக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பெண்கள் இரவு நேரங்களில் தனியாக பயணம் செய்யும் போதும், கைக்குழந்தையுடன் பயணம் செய்யும் போது அப்பர் பெர்த் ஒதுக்கப்பட்டால் கடும் சிரமம் ஏற்படும். இதனைக் கருத்தில் கொண்டு, படுக்கை எண் 1LB மற்றும் 4LB ஒதுக்கீடு செய்து இணையத்தில் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
2 படுக்கைகளை ஒதுக்கீடு செய்து இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். படுக்கை வசதி கொண்ட குளிர்சாதனம், குளிர்சாதனம் இல்லாத பேருந்துகளில் பெண்களுக்கு பிரத்யேக படுக்கை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பேருந்து புறப்படும் வரை பெண் பயணிகள் எவரும் முன்பதிவு செய்யாதபட்சத்தில் 2 படுக்கைகள் பொது படுக்கையாக கருதப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பெண்களின் பாதுகாப்பு மற்றும் வசதியை கருத்தில் கொண்டு அவர்களுக்கென பிரத்யேக படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துறை தெரிவித்துள்ளது.


போக்குவரத்துறை அமைச்சராக இருந்த ராஜ கண்ணப்பன் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக புதிய அமைச்சராக சிவசங்கர் பதவியேற்ற உடன் பெண்களைக் கவரும் வகையில் அதிரடி அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பு தனியாக பேருந்தில் பயணம் செய்யும் பெண்களின் பயணத்தை இனிமையானதாக மாற்றும் என்பதில் சந்தேகமில்லை.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

விநாயகருக்கு என்னென்ன பொருட்கள் அபிஷேகம் செய்தால் பலன்