ராம.செ.சுப்பையா நினைவுச்சிறுகதைப்போட்டி 2022

 அப்பாவை காலத்துக்குள் ஆவணமாக்குவது எப்படி?

****************************************************************அன்பு தம்பி ,எழுத்தாளன் தேவா சுப்பையா ..எனக்கு முகநூலில் கிடைத்த ஆத்மார்த்த உறவு. அவன் கம்பெனி திறப்பு விழாவுக்கு கூட என்னைத்தான் அழைத்து திறக்க வைத்தான். எதிலும் என்னை முன்னிறுத்துவான். தேவா சுப்பையா தன் அப்பா திரு ராம.செ. சுப்பையா மீது அப்படியொரு அன்பு மரியாதை. கொஞ்சம் பழமைவாதியும்  கூட ..அப்பா காலமானாலும் கூடவே நிழலென பின் தொடர்வதாக நம்பும் ரகம். 


இன்று தேவா சுப்பையாவின் தகப்பனார் திரு.ராம.செ.சுப்பையா வுக்கு 75 வது பிறந்த நாள். அதை கொண்டாட , அப்பா பெயரை எழுத்துலகில் ஆவணமாக்க  50,000 ரூபாய் செலவில் இந்த சிறுகதை போட்டியை அறிவிக்க விரும்பி அதை நான், கருமாண்டி ஜங்ஷன் மூலம் முன்னின்று நடத்த வேண்டும் என  கேட்டு கொண்டான். 


அதன்படி . முதல் மூன்று என்று தர வரிசை வேண்டாம். என்றும் நடுவர் தேர்வு செய்யும் சிறந்த 10 கதைகளுக்கு தலா 5,000 வழங்கலாம்  அந்த பத்து கதைகளை நூலாக வெளியிடலாம் என்று  தேவாவுடன் பேசி முடிவு செய்து இங்கு அறிவிக்கிறேன்.  


இந்திய முகவரியில் இருப்பவர்கள் மட்டும் போட்டியில் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.பிற நாட்டிலுள்ளவர்கள் கலந்துக்கொண்டு வெற்றி பெற்றால் இந்த எளிய பரிசு பணத்தை பிற நாட்டுக்கு அனுப்புவதில் சிக்கல். என்பதை குறிப்பிடுகிறோம்.இந்திய முகவரி இருப்பின் யாரும் கலந்துக்கொள்ளலாம்.


சக நண்பர்கள் போட்டியில் கலந்து கொள்ள வேண்டுகிறோம் .


இன்னபிற குழுக்களுக்கு செய்தியை கடத்த விண்ணப்பிக்கிறோம்..


என்றும் அன்பு தம்பி தேவா சுப்பையாவுடன்


 உங்கள் கருமாண்டி ஜங்ஷன் அமிர்தம் சூர்யா ..


(விளம்பர வடிவமைப்பு- தமிழ் அரசு Tamil Arasu)


-----அமிர்தம் சூர்யா ..
Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

விநாயகருக்கு என்னென்ன பொருட்கள் அபிஷேகம் செய்தால் பலன்