ஸீரோ டிகிரி நாவல்/சிறுகதை/ குறுநாவல் போட்டி 2022

ஸீரோ டிகிரி நாவல்/சிறுகதை/ குறுநாவல் போட்டி 2022

Last date : May 31


*விதிமுறைகள்*


படைப்புகளை மின்னஞ்சலில் யூனிகோட் வடிவத்தில் மட்டுமே (word doc)ல் அனுப்ப வேண்டும். கையெழுத்து பிரதி மற்றும் பிடிஎஃப் (pdf) படிவம் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. மின்னஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி zerodegreeaward@gmail.com.


போட்டிக்கு அனுப்பும் படைப்பின் வகைமையை நாவல் போட்டி/குறுநாவல் போட்டி/சிறுகதை போட்டி என்று Subject-ல் குறிப்பிடவும். படைப்புகளை அனுப்ப வேண்டிய கடைசி நாள் மே 31, 2022. அதற்குப் பிறகு வரும் படைப்புகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.


இந்தப் போட்டி குறித்த எல்லா சந்தேகங்களுக்கும் zerodegreeaward@gmail.com மின்னஞ்சல் வழியாக மட்டுமே தொடர்புகொள்ள வேண்டும்.


ஏற்கனவே அச்சிலோ, மின்னிதழிலோ, கிண்டில் அல்லது ஆடியோ புக் என எவ்வித வடிவத்திலும் வெளிவராத படைப்பு என்கிற உறுதிமொழி இருத்தல் வேண்டும். படைப்பை அனுப்பியதில் இருந்து, போட்டி முடிவு வெளியாகும் வரை அதனை வேறு எந்த போட்டிக்கோ, இதழுக்கோ,பதிப்பகத்துக்கோ அச்சு வடிவிலோ அல்லது மின்னூலாகவோ அனுப்புவதாக இல்லை என்று உறுதியளிக்க வேண்டும். மேலும் படைப்பானது தனது சொந்தக் கற்பனையில் உருவானது என்றும் அது எவ்வித மொழிபெயர்ப்போ அல்லது தழுவலோ அல்ல என்கிற உறுதிமொழியையும் படைப்புடன் இணைத்திருக்க வேண்டும்.


நடுவர்கள் எடுக்கும் முடிவே இறுதியானது.

Comments

Popular posts from this blog

:இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள்? வாழ்வியல் முறையை மாற்றுங்கள்!

அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி