21 வயதில் சரித்திர நாவல் எழுதிய வில்லரசன்

 21 வயதில் சரித்திர நாவல் எழுத முடியுமா..?

வில்லரசனால் வில்லரசன் முடிந்திருக்கிறது.
முன் பின் அறிமுகமில்லாத ஒரு சிறுவனின் 600 சொச்சம் பக்கங்கள் கொண்ட நாவலை நம்பி பதிப்பிக்க யாராவது முன்வருவார்களா..?
வருவார்கள். அதற்காகத்தானே ‘கெளரா’ பதிப்பக குழுமம் Gowra Puthaga Maiyam கௌரா புத்தக மையம் செயல்பட்டு வருகிறது!
கனவுபோல்தான் இருக்கிறது. தெரியாத எண்ணில் இருந்து ஒருநாள் கைபேசியில் அழைப்பு வந்தது.
இதுவரை சந்தித்திராதவர் தன்னை வில்லரசன் என்று அறிமுகப்படுத்தி கொண்டு ‘குங்குமம்’ வார இதழில் வெளியான ‘ரத்த மகுடம்’ சரித்திரத் தொடர் குறித்து பேசினார்.
அவரைக் குறித்து விசாரித்தபோது கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு சில மாதங்களாக தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருவதாகவும் ஒரு வரலாற்று நாவலை எழுதி முடித்திருப்பதாகவும் அதை என்ன செய்வதென்று தெரியவில்லை என்றும் குறிப்பிட்டார்.
‘‘சிறுகதை எழுதுவீர்களா..?’’
‘‘சரித்திர சிறுகதையா..?’’
‘‘ஆம். 800 words எழுதி அனுப்புங்கள்...’’
‘‘இதுவரை சிறுகதை எழுதியதேயில்லையே..?’’
‘‘நாவல் எழுதியிருக்கிறீர்களா?’’
‘‘இல்லை... எழுதி முடித்திருப்பதுதான் முதல் வரலாற்றுப் புதினம்...’’
‘‘அதேபோல் நம்பிக்கையுடன் முதல் சரித்திர சிறுகதையை எழுதுங்கள்...’’
மறுநாளே அனுப்பினார். படித்ததுமே வில்லரசனிடம் சரக்கு இருப்பது புரிந்தது. சணல் கயிற்றால் மூட்டையை இறுக்கி கட்டியதுபோல் எழுத்தில் அப்படியொரு க்ரிப். எல்லாவற்றுக்கும் மேல் வெறும் வரலாற்றுக் குறிப்பு - தகவல் - கல்வெட்டு வாசகங்கள் ஆகியவற்றை மட்டுமே கற்பனைக் கலந்து எழுதாமல் அதற்குள் கதை ஒன்றை சொல்ல முயற்சித்திருந்தார்.
சட்டென 24 X 7 இளம் வரலாற்று நாவலாசிரியர்களை வாழ்த்தி ஊக்குவித்து அவர்களது படைப்புகள் பிரசுரமாக வழிகாட்டி வருவதையே தன் வாழ்நாள் கடமையாக கொண்டிருக்கும் சரித்திர கதைகளின் மன்னரான உதயணனின் Kanchi Narasimhan நினைவு வந்தது.
உடனே வில்லரசனை கைபேசியில் அழைத்து உதயணனின் எண்ணை அளித்து தொடர்பு கொள்ளும்படி சொன்னேன்.

அதன்படியே வில்லரசன் செய்ய... ‘கெளரா’ பதிப்பக குழுமத்தை சேர்ந்த அண்ணன் இராஜேந்திரனின் தொடர்பு எண்ணை உதயணன் அளிக்க...
‘‘உதயணன் சார் சொல்லி பேசறீங்களா... அப்புறமென்ன... உடனே நாவலை மின்னஞ்சல் செய்யுங்க...’’ என அண்ணன் இராஜேந்திரன் Rajendiran Sambanthan பச்சைக் கொடி காட்ட...
அரைநாள் பொழுதில் வில்லரசனின் நாவல் பிரதி பதிப்பகத்தை அடைந்துவிட்டது.
‘கெளரா’வோ அல்லது ‘வானதி’யோ அல்லது வேறு பதிப்பகமோ... யார் வரலாற்று நாவல்களை வெளியிட்டாலும் அதைப் படித்துப் பார்த்து பிரசுரிக்க தகுதியானது என ஒப்புதல் அளித்து, எடிட் செய்து தருவது மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய சுந்தர் கிருஷ்ணன்தான் Sundar Krishnan.
தமிழ் சரித்திர நாவல்களின் என்சைக்ளோபீடியாவான இவர், manuscriptஐ படித்து நொங்கு எடுத்து விடுவார். இவர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்வதற்குள் எழுத்தாளர்களுக்கு நாக்கு தள்ளிவிடும்.
அப்படிப்பட்ட சுந்தர் சார், வில்லரசனின் படைப்பை படித்துவிட்டு ‘‘2021ம் ஆண்டின் முக்கியமான வரலாற்று நாவல்களில் ஒன்றாக இந்தப் புதினம் அமையும்...’’ என ‘கெளரா’ குழுமத்திடம் சொல்ல...
சுந்தர சோழர், ராஜ ராஜ சோழர், ராஜேந்திர சோழர்... என மூன்று தலைமுறை மன்னர்களுக்கும் பிரதம அமைச்சராக இருந்து வழிகாட்டிய அநிருத்த பிரம்மராயர் போல் -
இளம் வரலாற்று நாவலாசிரியர்களுக்கு தகுந்த ஆலோசனைகளை வழங்கி மனதார அவர்களைப் பாராட்டி ஊக்குவிக்கும் ராமநாதன் Rama Nathan சார், தனது கஸ்டடியில் வில்லரசனை எடுத்துக் கொள்ள -
ஜாம் ஜாம் என நேற்று மாலை வில்லரசனின் முதல் படைப்பான ‘வேங்கை மார்பன்’ வெளிவந்து விட்டதாக ‘கெளரா’ குழுமத்தின் ‘தல’யான அண்ணன் இராஜசேகரன் Gowra Rajasekaran முகநூலில் அறிவித்திருக்கிறார்.
மனமார்ந்த
வாழ்த்துகள்
வில்லரசன் ❤
ஸ்ரீமதி, சதீஷ் விவேகா, ராசிதா, பத்மா சந்திரசேகர்... என நீளும் ‘கெளரா’ குழும இளம் வரலாற்று எழுத்தாளர்கள் பட்டியலில் - இவர்கள் அனைவருமே 40 வயதுக்கு உட்பட்டவர்கள்! - கடைக்குட்டியாக இணைந்திருக்கிறீர்கள்.
Way to Go... தொடர்ந்து எழுதுங்கள் (y) ❤
வேங்கை மார்பன்
636 பக்கங்கள்
விலை: ரூ 640
கெளரா பதிப்பகம்
தொடர்புக்கு: 9952034876 / 9943428994
கே.என்.சிவராமன் முகநூல் பதிவில் இருந்துComments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

விநாயகருக்கு என்னென்ன பொருட்கள் அபிஷேகம் செய்தால் பலன்