ஒரே நிறுவனத்தில் 84 வருடங்கள் 9 நாட்கள் பணியாற்றியவர் என்ற கின்னஸ் சாதனை

 




பிரேசில் நாட்டைச் சேர்ந்த 100 வயதான வால்டர் ஓர்த்மேன் (WALTER ORTHMANN) என்பவர் ஒரே நிறுவனத்தில் 84 வருடங்கள் பணியாற்றி கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார். 1922-ல் பிறந்த இவர், இண்டஸ்ட்ரியாஸ் ரெனாக்ஸ் எஸ்.ஏ (Industrias Renaux S.A.) என்ற டெக்ஸ்டைல் நிறுவனத்தில் விற்பனை உதவியாளராக தனது 15 வது வயதில் (ஜனவரி19,1938) வேலைக்குச் சேர்ந்திருக்கிறார். பின்னர் நீண்ட நாள்கள் பணிக்குப் பிறகு பதவி உயர்வு பெற்று சேல்ஸ் மேனேஜராக பணியாற்றி வந்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இவர் சேல்ஸ் மேனேஜராக பல விற்பனைப் பயணங்களை மேற்கொண்டுள்ளார். தற்போது இவருக்கு வயதாகிவிட்டதால் விற்பனைப் பயணங்களுக்குச் சென்றுவருவதைத் தவிர்த்துவிட்டு பிரதிநிதிகள் குழுவை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இவ்வாறு வேறெந்த நிறுவனத்திற்கும் மாறாமல் ஒரே நிறுவனத்தில் பணியாற்றி நம்பிக்கைக்குரிய பணியாளர் என்னும் பெயரையும் பெற்றவர். கடந்த ஏப்ரல் 19 அன்று தனது 100-வது பிறந்தநாளைக் கொண்டாடிய இவர் ஒரே நிறுவனத்தில் 84 வருடங்கள் 9 நாட்கள் பணியாற்றியவர் என்ற கின்னஸ் சாதனை படைத்துள்ளார்

நன்றி: விகடன்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,