பருப்பே இல்லாத இட்லி சாம்பார்.. தெரிஞ்சு வச்சிக்கோங்க
பருப்பே இல்லாத இட்லி சாம்பார்.. தெரிஞ்சு வச்சிக்கோங்க
தேவையான பொருட்கள்:
தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், மஞ்சள் தூள், கடுகு, எண்ணெய், கறிவேப்பிலை,. பெருங்காயம், உப்பு, கடலை மாவு , கொத்தமல்லி.
செய்முறை;
1. முதலில் குக்கரில் தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து அதில் 5 விசில் நன்கு வேக வைத்து கொள்ள் வேண்டும். வெந்த கலவையை மசித்துக் கொள்ள வேண்டும்.
2. இப்போது கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, காந்த மிளகாய், சேர்த்து தாளித்து அதில் வேக வைத்த கலவையை சேர்க்க வேண்டும்.
3. இப்போது தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
4. கொதித்து வரும் போது, 2 ஸ்பூன் கடல மாவை அதில் சேர்க்க வேண்டும்.
5. மாவு நன்கு கரைந்து கெட்டி பதத்திற்கு வந்த பின்பு இறுதியாக கொத்தமல்லி சேர்த்து இறக்கினால் சூப்பரான டேஸ்டியான பருப்பே இல்லாமல் டிபன் சாம்பார் தயார்.
Comments