இளையராஜாவை விமர்சிப்பவர்கள் அம்பேத்கரை பொதுத் தலைவராக ஏற்பார்களா/?

 

இளையராஜாவை விமர்சிப்பவர்கள் அம்பேத்கரை பொதுத் தலைவராக ஏற்பார்களா



இளையராஜாவை விமர்சிப்பவர்கள் அம்பேத்கரை பொதுத் தலைவராக ஏற்பார்களா என பிரபல இயக்குநர் லெனின் பாரதி கேள்வி எழுப்பியுள்ளார்.

அம்பேத்கரும் மோடியும் என்ற தலைப்பில் ப்ளூகிராப்ட் டிஜிட்டல் பவுன்டேஷன் வெளியிட்ட புத்தகத்திற்கு இளையராஜா முன்னுரை எழுதியிருந்தார். அதில் பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகளை கண்டால் அம்பேத்கரே பெருமைபடுவார் என இளையராஜா குறிப்பிட்டிருந்தார்.
இது பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது. இது தொடர்பாக இரு வேறு கருத்துகள் எழுந்துள்ளன. இதனிடையே இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா கருப்பு திராவிடன், பெருமைமிகு தமிழன் என இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். யுவன்சங்கர் ராஜாவின் பதிவு தற்போது சமூகவலைதளங்களில் விவாதங்களை கிளப்பியுள்ளது.

இளையராஜாவின் கருத்து இளையராஜாவின் கருத்துக்கு பாஜகவினர் ஆதரவாகவும் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் உள்ளிட்டோர் எதிராகவும் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இது தொடர்பாக இயக்குநர் லெனின் பாரதி, இளையராஜா விவகாரம் குறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.
பிறவிப்பயன் அவர் கூறுகையில் பிறவிப்பயன், ஊழ்வினைப் பயன், குரு கிருபை என்றிருக்கும் இளையராஜா அவர்களை அண்ணல் அம்பேத்கர் பற்றிய ஒப்பீடு குறித்து விமர்சிப்பவர்களில் எத்தனை பேர் அண்ணல் அம்பேத்கரை அனைத்து மக்களுக்குமான பொதுத் தலைவராக பார்க்கும் பார்வை கொண்டுள்ளனர்..?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

ஆரஞ்சுப் பழத்தின் பயன்கள்:

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி