உலகுக்கு சங்கத்தமிழை உணரவைத்த ஞானஒளி
தமிழ் தாத்தா உ.வே சாமிநாதரின் நினைவு நாளான இன்று, அம் மாமனிதனை நினைவில் நாமும் இப்போது...
அக்காலப் புலவர்கள் எழுத்தாணி கொண்டு சொல்லழகுடன் எழுதியதெல்லாம் பனை ஓலைகளில் தான். அந்த ஏட்டுத் தமிழை மீட்டுத் தந்தவருள் தமிழ் தாத்தா உ. வே. சாமிநாத ஐயருக்கு முக்கிய பங்கு உண்டு.
வாழ்நாள் முழுவதும் ஓலைச்சுவடிகளை தேடித் தேடியே அதை பல நூல்களாய் அச்சிட்டு மாபெரும் பணியை மேற்கொண்டு தமிழ் மொழிக்கு நல்லதொரு தொண்டாற்றியவர் உ.வே.சா. என்னும் தமிழ் தாத்தா......
அவருக்கு சில வரிகள்.
சிந்தனையில் எப்போதும் தேடுதலே தொடக்கம்
தேடுதலில் கிடைத்தாலே பேரின்பம் அடக்கம்
ஒன்றா இரண்டா ஓலைச்சுவடிகள் பலதேடி
தனியொருவனாய் சங்க இலக்கியத்தை தெரியவைத்த முன்னோடி
பனையோலைகள் தமிழ்ப்பண் படைத்த பூசைப்பொருள்
பழமையும் தொன்மையும் புரியவைத்த சுவடிச்சுருள்
தமிழ்ப்புலமை வேண்டுமே என்னவென்று தெரிந்திட
தவப்பயனாய் மீனாட்சி சுந்தரம்பிள்ளையிடம் மாணாக்கனாய் இருந்திட
நுட்பமான அறிவு வியக்கும் வண்ணம்
நூதன முறையில்
வளர்ந்த நல்லெண்ணம்
உள்ளத்தில் வளர்த்தார் தமிழ் மொழிப்பற்றினை
தமிழ் உலகம் மறவாது இவர் செய்த தொண்டினை
சிதைந்து மறைந்த சொற்களை செம்மைப்படுத்தி
சிதையாமல் பொருள் விளங்கத் திருத்தி
முனைந்து வாசித்து பெற்ற புளங்காகிதம்
மூலப்படியை நூலாய் அச்சுக்கோர்த்த காகிதம்
மொழியின் பெருமை பலர் அறியவே தோன்றினார்
முயற்சியால் புதுப்பித்து நூல்களை தேற்றினார்
உ.வே.ச. மனதிலே கொழுந்துவிட்ட ஒளியே
உலகுக்கு சங்கத்தமிழை உணரவைத்த ஞானஒளியே....
பெசன்ட் நகரில் உள்ளது இவர் பெயரில் நூல் நிலையம்.
பெருமை கொண்ட சங்க இலக்கியங்கள், இலக்கணம் தரும் மொழி ஆவலையும்...
முருக. சண்முகம்
Comments