மோரை தொடர்ந்து பருகி வந்தால் தொப்பை குறைய தொடங்கும்.

 

காலையில் ஒரு கிளாஸ் மோர் இப்படி குடிச்சுப் பாருங்க… இவ்வளவு நன்மை இருக்கு!

Masala Buttermilk or Masala mor recipe making and its benefits in tamil: 10 நாட்களுக்கு மேலும் இந்த மோரை தொடர்ந்து பருகி வந்தால் தொப்பை குறைய தொடங்கும். கொழுப்பு இழப்பு மற்றும் அதிக கொலஸ்ட்ரால் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

நமது உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை அள்ளித்தரும் பானாங்களில் ஒன்றாக மோர் உள்ளது. இது கோடை காலத்தில் உடல் நீரேற்றத்துடன் இருக்கவும், வெப்பத்தை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது. மேலும், இதன் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை அறிந்த பல மக்கள் ஆண்டு முழுவதும் தினமும் ஒரு கிளாஸ் மோர் குடிப்பதை விரும்புகிறார்கள்.

இந்த அற்புத மோர் உடலில் தேங்கியிருக்கும் கெட்ட கழிவுகளை வெளியேற்றி, உடலின் நீர்ச்சத்து அதிகரிக்க உதவுகிறது.


காலையில் நாம் பருகும் ஒரு டம்ளர் மோர் நம்முடைய உடலில் பல நல்ல வேலைகளைச் செய்கிறது. அதனை நீங்கள் உணர அவற்றை தொடர்ந்து 10 நாட்களுக்கு பருகி வர வேண்டும்.

நாம் தொடர்ந்து இந்த மோர் பருகி வருவதால், தினமும் நாம் உடல் புத்துணர்ச்சி பெறுவதை உணர முடியும், உடலுக்குத் தேவையான நீர்ச் சத்து கிடைக்கும், மற்றும் உடல் எடை சீராக குறைய தொடங்கும்.

10 நாட்களுக்கு மேலும் இந்த மோரை தொடர்ந்து பருகி வந்தால் தொப்பை குறைய தொடங்கும். கொழுப்பு இழப்பு மற்றும் அதிக கொலஸ்ட்ரால் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.


மசாலா மோர்:

இப்படியாக உடலுக்கு பல்வேறு அற்புத நன்மைகளை தரும் மசாலா மோர் தயார் செய்ய துவங்கும் முன், அவற்றுக்கான பொடியை முதலில் தயார் செய்து கொள்ள வேண்டும்.

மசாலா மோர் பொடி – தேவையான பொருட்கள்:

வெந்தயம் – 1 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
மிளகு – 1/2 ஸ்பூன்
கருவேப்பிலை – 1/2 கைப்பிடி அளவு

மசாலா மோர் பொடி செய்முறை:

அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் மேலே வழங்கப்பட்டுள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்றாக வறுத்துக்கொள்ளவும்.
இந்த பொருட்களை வறுக்க ஒரு நிமிட இடைவெளி போதும்.

இறுதியாக கருவேப்பிலையை வறுக்கும் போது, அவை மொறுமொறுவென வரும் வரை நன்றாக கடாயில் வறுத்து கொள்ளவும்.

இந்த பொருட்கள் எல்லாம் நன்றாக ஆறிய பின்னர், அவற்றை மிக்சியில் இட்டு, அதனுடன் 1/2 டீ ஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். இந்த பொடியை ஒரு பாட்டிலில் போட்டு ஸ்டோர் செய்து, நாம் மசாலா மோர் தயார் செய்யும் போது பயன்படுத்தி வரலாம்.

மசாலா மோர் எப்படி தயார் செய்வது?

மசாலா மோர் தேவையான பொருட்கள்:

தயிர் – 4 டேபிள் ஸ்பூன்!
இஞ்சி – ஒரு அங்குலம்
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
தண்ணீர் – 1/2 கப்

மசாலா மோர் சிம்பிள் செய்முறை:

ஒரு மிக்சி எடுத்து அதில் மேலு கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து அரைக்கவும்.

இவற்றை அரைக்கும்போது தயிரில் உள்ள வெண்ணெய் பிரிந்து மேலே மிதந்து வரத்தொடங்கும். அப்போது ஒரு ஸ்பூன் எடுத்து மிதக்கும் மோரை நீக்கி விடவும். வெண்ணெய் நீக்கிய மோர் தான் உடல் எடை இழப்புக்கு உதவும்.

இந்த மோரை வடிகட்டிய பின்னர், 1 1/2கப் அளவு தண்ணீரை ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

தொடர்ந்து, முன்னர் அரைத்து வைத்துள்ள மசாலா மோர் பொடி 1/2 ஸ்பூன் அளவு எடுத்து, அவற்றை நன்றாக கலந்து 2 டம்ளரில் ஊற்றி பரிமாறினால் உடல் எடையை குறைக்க உதவும் மோர் ரெடி.

thanks

https://tamil.indianexpress.com/Comments

Popular posts from this blog

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,