பெரம்பலூருக்கு தங்கமெடல்களை குவித்த நியாயவிலைக்கடை விற்பனையாளர் கலைச் செல்வன்.!!

 பெரம்பலூருக்கு தங்கமெடல்களை குவித்த நியாயவிலைக்கடை விற்பனையாளர்

கலைச் செல்வன்.!!பெரம்பலூர் கூட்டுறவு விற்பனை சங்க நியாயவிலைக்கடை விற்பனையாளர்

கலைச்செல்வன்..!!


பாராஒலிம்பிக்ஸ் போட்டிகளில் 

தேசீய அளவில்

நீச்சல் போட்டியில்

வெள்ளி பதக்கம்

வென்றுள்ளார்.!!

கலைச்செல்வனை இன்று 

பெரம்பலூர் மண்டல இணைப்பதிவாளரும்

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களூம்

கொண்டாடுகிறார்கள்.!!


கலைச்செல்வன்

கடந்து வந்த கதை கேட்டால்

கனவுகள் அழும்

கண்ணீரும் அழும்- இந்த

கவிதையே அழும்!!


பெரம்பலூர் மாவட்ட 

சராசரி

விவசாய குடும்பத்தின் அடையாளம்

விற்பனையாளர் கலைச்செல்வன்.

அப்பா சுப்பிரமணி விவசாயி

வறுமையை வெல்ல முடியாமல்

வாழ்க்கையை நடத்தியவர்.!!

மகனை ஆசிரியராக்க

கனவு கண்டார்.


கலைச்செல்வனும்

கண்களில் கனவோடு 

நெஞ்சில் தினவோடு

ஆசிரியர் பயிற்சியை

முடித்தார்.!!

விடுமுறையில் தந்தைக்கு

உதவியாய் தனயன் 

லாரியில்

கிளினராக பணி செய்த போது

விபத்தில் சிக்கி இடதுகையை இழந்தார்

கலைச்செல்வன்.!!கையை இழந்தாலும்

கால்களை இழக்கவில்லை

ஓடு ஓடு என்று உற்சாகம்

தந்தார் 

முன்னாள் மாவட்ட ஆட்சியர்

தர்ரேஸ் அகமது.!!


காலுக்கு செருப்புமின்றி

கால் வயிறு குடிக்க கஞ்சிக்கு வழியின்றி

கண்களில் கனவோடு

காலையும் மாலையும்

பெரம்பலூர் ஸடேடியத்தில்

ஓடிய கால்களுக்கு

மாவட்ட மாநில

தேசீய மெடல்கள்

தேடிவந்தன.!!


லண்டனில் நடந்த பாராஓலிம்பிக்போட்டியில்

5000 மீட்டர் தொடர் ஓட்டத்தில்

வெண்கலம் வென்று திரும்பினார்

விற்பனையாளர் கலைச்செல்வன்.!!

அன்று தொடங்கிய 

பாரா ஒலிம்பிக்ஸ்பதக்க பட்டியல்

இன்றும் தொடர்கிறது.!!


2012ல் சிறப்பு ஓலிம்பிக் போட்டியில்

100 ஒட்டத்தில் முதல் இடம்.!!


2013 ல் தேசீய நீச்சல்போட்டியில்

மூன்றாம் இடம்.!!


2014 தேசீய அளவில் 800 மீட்டர்

ஒட்டத்தில் முதல் பரிசு.!!


2015 ல் ஸ்போர்ட்ஸ் அதாரிட்டி ஆப் இந்தியா நடத்திய 

100 மீட்டர் ஓட்டத்தில் முதல் பரிசு.!!


2016 உலக அளவிலான 

ரியோ ஒலிம்பிக்

சைக்கிள் போட்டியில் நான்காம் பரிசு.!!


2017 ல் மாநில அளவிலான

மாரத்தான் 10 கி.மீ, 21கி.மீ,32கி.மீ,41கி.மீ

போட்டிகளில் இரண்டாம் பரிசு

முதல் பரிசு.!!


2020 தேசீய அளவிலான நீச்சல்

போட்டிகளில் வெள்ளிபதக்கம்.!!


2021 மாநில அளவில் 50மீட்டர்

100 மீட்டர் நீச்சல் போட்டிகளில்

தங்க மெடல்.!!


தற்போது 2022 தேசீய அளவில்

ராஜஸ்தான் மாநிலம்

உதயப்பூரில் 200 மீட்டர் நீச்சல் போட்டியில் சில்வர்மெடல்.!!


கலைச்செல்வன் மீது உள்ளூர்தாண்டி

உலக வெளிச்சம்

விழ கூட்டுறவுத்துறையின் விற்பனையாளர் பணியே

விலாசம்

தந்துள்ளது.!!


வெற்றிக்கோட்டையை முத்தமிட்ட

பின்னர் இந்திய தேசீய கொடியை

விற்பனையாளர் கலைச்செல்வன்

தன் தோள்களில் ஏற்றி

மைதானத்தை வலம் வந்த போது

உயர்ந்தது இந்தியாவின் பெருமை

மட்டுமின்றி

உயர்ந்தது

கூட்டுறவுத்துறையின்

பெருமையும் தான்.!!


சிலிர்த்து எழுந்தது

கலைச்செல்வன் மட்டுமல்ல 

அவரது

தன்னம்பிக்கை.!!


அடுத்து ஓலிம்பிக் போட்டியில்

தங்கம் வெல்வேன்

என்று மாவட்ட ஆட்சியரிடமும்

மண்டல் இணப்பதிவாளரிடமும்

சூளுரைத்த தங்க மகனே

உன் தோளூக்கு மாலை தருகிறோம்

உன் தொண்டுக்கு கூட்டுறவுத்துறை

வணக்கம் செலுத்துகிறது.!!


வாழ்க கூட்டுறவுத்துறை

வளர்க விற்பனையாளர் கலைச்செல்வன்.!!


-----கே.கே.செல்வராஜ்

துப/ பொவிதி

பெரம்பலூர்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,