ஸ்ரீராமபுண்யஜெயம்.

 ஸ்ரீ ராமர்நம்மைப்போல சிரித்தவர் நம்மைப்போலே அழுதவர்

நம்மைப்போலே காதலித்து காதலோடு வாழ்ந்தவர்

இழப்புகளைக் கண்டவர் மீண்டெழுந்து வந்தவர்

உறவுகளைப் பிரிந்திருக்கும் சோகங்களை அறிந்தவர்

செல்வத்தையும் கண்டவர் ஏழ்மையையும் கண்டவர்

செல்வத்திலும் ஏழ்மையிலும் செம்மையாக வாழ்ந்தவர்


விதியென்னும் புயலிலே ஆடாத மரமல்லர்

அத்தனை புயலிலும் வீழாத மரமவர்

தன்னுயிராம் சீதையை தியாகம்செய்த மேன்மையர்

இதயத்தில் சீதையை இழக்காத ஆண்மையர்

புரிதலில்லா மக்களை பொறுத்துக்காத்த பூமியர்

புரிந்தபின் இதயத்தில் உயிரான சாமியர்


என்னுயிரும் ராமரே என்மூச்சும் ராமரே

என்னிதயம் ராமரே என்வாழ்க்கை ராமரே

என்கண்கள் ராமரே கண்மணியும் ராமரே

என் மனத்திரையில் எப்பவும் மலருமவர் ரூபமே

என் மூளை எப்பவும் துதிப்பதவர் பாதமே!


ராம் ராம் என்றால் நல்லது நடக்கும்

ராம் ராம் என்றால் அமைதி கிடைக்கும்

ராம் ராம் என்றால் குணங்கள் சிறக்கும்

ராம் ராம் என்றால் மகிழ்ச்சி பிறக்கும்.


ராம் ராம் என்றால் உள்ளம் உருகும்

ராம் ராம் என்றால் உவகை பெருகும்

ராம் ராம் என்றால் அறிவுத் தெளியும்

ராம் ராம் என்றால் தர்மம் புரியும்.


ராம் ராம் என்றால் வீரம் விளங்கும்

ராம் ராம் என்றால் வெற்றி விழையும்

ராம் ராம் என்றால் செல்வம் செழிக்கும்

ராம் ராம் என்றால் கதவுகள் திறக்கும்.


ராம் ராம் என்றால் மனது அடங்கும்

ராம் ராம் என்றால் புலன்கள் ஒடுங்கும்

ராம் ராம் என்றால் யோகம் நிலைக்கும்

ராம் ராம் என்றால் மோட்சம் கிடைக்கும்.


ஸ்ரீ ராமர் புகழை தினமும் ஜபித்தால்

ஒரு வைரம் போல மனதில் பதித்தால்

துன்பம் எல்லாம் தொலைவில் ஓடும்

இன்பம் எல்லாம் விரைவில் கூடும்

ஸ்ரீராமபுண்யஜெயம்.


---சுகுமார்.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

விநாயகருக்கு என்னென்ன பொருட்கள் அபிஷேகம் செய்தால் பலன்