பார்வையிலே வடம் புடிச்சான்'

 1963-ல் கே.ஆர்.விஜயாவை "கற்பகம்" படம் மூலம் அறிமுகம் செய்கிறார் படத்தின் இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன். ஆனால் கண்ணதாசன் அப்போது அரசியலில் படு பிசி. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஊரில் இருப்பார். அதனால் நேரமின்மை காரணத்தினால் வாலிக்கு வாய்ப்பு கிடைத்தது. படத்திற்கு விஸ்வநாதன்-ராமமூர்த்தியின் இசையில் வந்து ஐக்கியமானது வாலிக்கு கூடுதல் பெருமை.. சவாலின் வெளிப்பாடு...


அதிர்ஷ்டத்தின் உச்சம்.. படத்தில் 4 பாடல்கள். நான்குமே சுசிலா பாடியது. ஒரு ஆண் குரலும் கிடையாது. இது திட்டமிட்ட காரணம் ஏதும் இல்லை. பி.சுசிலாவின் தேன்குரலில் பாடல்கள் தமிழகத்தையே ரீங்காரமிட்டது. 'அத்தைமடி மெத்தையடி' அனைரையும் நித்திரை கொள்ள வைத்தது. படம் சக்க போடு போட்டது. படக்குழுவினர் 100-வது நாள் விழா எடுக்கிறார்கள்.

புன்னகையுடன் வந்த கண்ணதாசன்
அந்தவிழாவுக்கு கண்ணதாசனை அழைக்கிறார்கள். தான் ஒரு பாடுலும் எழுதாத விழாவுக்கு அழைக்கிறார்களே, இன்னொருவர் எழுதியதை பாராட்ட கூப்பிடுகிறார்களே என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல் சிரித்தபடியே மேடையில் ஏறி அமர்கிறார் கவியரசர் கண்ணதாசன்.

விழா தொடங்கியது. ஒருவர் பேச ஆரம்பிக்கிறார், "பந்தயம் நடைபெறும்போது பல ரேக்ளா ரேஸ்களில், ஒன்றுக்கும் ஆகாத சில உதவாத, சோப்ளாங்கி மாடுகள் அது இஷ்டத்துக்கு ஓடிவந்து முன்னால் வந்துநின்றுவிடும். அப்படித்தான், இந்த படத்திலும் பாட்டுக்கள் எப்படியோ பிரபலமாகிவிட்டது" என்றார்.

இதைக் கேட்டதும், அதிர்ச்சியிடைந்த கண்ணதாசன், உடனே பேச துவங்கினார் "நண்பர் பாடல்கள் குறித்து தவறாக பேசிவிட்டார். அந்த பாடல்களையெல்லாம் நானும்தான் கேட்டேன். குறிப்பாக அத்தையடி மெத்தையடி பாடலை இப்போதுகூட காரில் வரும்போது கேட்டு கொண்டுதான் வந்தேன். பாடலாசிரியர் நன்றாக எழுதியுள்ளார். ஒன்றுமேயில்லாமல் ஒரு பாட்டு இந்த அளவுக்கு ஹிட் ஆகிவிடாது. அதேபோல "பக்கத்துவீட்டு பருவமச்சான்" என்ற ஒரு பாடலில், 'பார்வையிலே வடம் புடிச்சான்' என்ற வரி வரும். இது சாதாரண வரிகிடையாது. ஒரு மிகச்சிறந்த கவிஞனால்தான் எழுத முடியும் என்றார். அவ்வளவுதான்... மேடையில் உட்கார்ந்திருந்த வாலிக்கு கண்கள் பனித்தன. முதல் பாராட்டு. முதல் அங்கீகாரம். கவியரசரிடமிருந்து கவிஞருக்கு கிடைத்த முதல் வரவேற்பு இது.
நன்றி: ஒன் இந்தியா தமிழ்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,