அடிமையாக மாறி போன முதலாளிகள்

 


எம்ஜிஆர், சிவாஜி காலத்தோடயே மரியாதை முடிஞ்சு போச்சு.. அடிமையாக மாறி போன முதலாளிகள்

தமிழ் சினிமாவில் இன்று ஏராளமான தயாரிப்பு நிறுவனங்களும், தயாரிப்பாளர்களும் இருக்கிறார்கள். அதேபோன்று முன்னணி நடிகர், நடிகைகள் கூட திரைப்படங்களை தயாரிக்க ஆரம்பித்து விட்டனர். ஆனால் அந்தக் கால சினிமாவில் அப்படி கிடையாது.

சில குறிப்பிட்ட தயாரிப்பு நிறுவனங்கள் மட்டுமே இருக்கும். அதில் ஏவிஎம் புரொடக்சன்ஸ் மற்றும் தேவர் பிலிம்ஸ் பிரபலமான தயாரிப்பு நிறுவனங்களாக இருந்தது. பழம்பெரும் இந்த தயாரிப்பு நிறுவனங்களை ஏவி மெய்யப்பச் செட்டியார் மற்றும் சின்னப்பதேவர் ஆரம்பித்தனர்.

ஏவி மெய்யப்பச் செட்டியார் தன்னுடைய ஏவிஎம் புரொடக்சன்ஸ் சார்பாக எண்ணற்ற படங்களை தயாரித்து இருக்கிறார். அதேபோல சின்னப்ப தேவரும் தன் தேவர் பிலிம்ஸ் சார்பாக முன்னணி நடிகர்களை வைத்து பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்திருக்கிறார்.

சொல்லப்போனால் அந்தக் காலத்தில் எம்ஜிஆர் மற்றும் சிவாஜி இருவரும் அதிக திரைப்படங்களை இந்த நிறுவனங்களுக்கு தான் நடித்து கொடுத்திருக்கின்றனர். அப்போதெல்லாம் அவர்கள் தயாரிப்பாளர்களுக்கு மிகுந்த மரியாதை கொடுப்பார்கள்.

தயாரிப்பாளர்கள் படப்பிடிப்பு தளத்திற்கு வந்து விட்டாலே சிவாஜி, எம்ஜிஆர் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்கள் அனைவரும் எழுந்து நின்று மரியாதை கொடுப்பார்கள். அது மட்டுமில்லாமல் அவர்கள் தயாரிப்பாளர்களை முதலாளி என்று அழைப்பார்கள்

இப்படிப்பட்ட மிகப் பெரும் செல்வாக்குடன் வலம் வந்தவர்கள் தான் அந்த கால பட தயாரிப்பாளர்கள். ஆனால் அந்த செல்வாக்கும் மரியாதையும் இப்போது இருக்கும் தயாரிப்பாளர்களுக்கு கிடைக்கிறதா என்றால் நிச்சயமாக கிடையாது. இப்போது இருக்கும் தயாரிப்பாளர்கள் அனைவரும் நடிகர்களுக்கு பயந்துதான் ஒவ்வொரு விஷயத்தையும் செய்கின்றனர்.

அதிலும் தயாரிப்பாளர்கள் தங்கள் மரியாதையை மொத்தமாக இழந்து வருகின்றனர். இது போக அவர்கள் நினைத்த கதையை எடுப்பதற்கான சுதந்திரமும் அவர்களுக்கு கிடைப்பதில்லை. அப்படி எடுக்கப்படும் கதையில் ஹீரோக்களின் தலையீடு அதிகமாக இருக்கிறது. இது படத்தின் தோல்விக்கும் வழிவகுக்கிறது.

இதனால் நஷ்டப்பட போவது தயாரிப்பாளர் மட்டுமே. ஹீரோக்கள் ஜாலியாக பணத்தை வாங்கிக் கொண்டு சென்று விடுகிறார்கள். தயாரிப்பாளர்கள் அந்த நஷ்டத்தில் இருந்து வெளிவருவதற்கு பல கஷ்டங்களை அனுபவிக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் ஹீரோ, ஹீரோயின் சம்பள விஷயத்தில் கறார் காட்டுவது, சம்பளம் தவிர்த்து பிற செலவுகளையும் தயாரிப்பாளர் தலையில் கட்டுவது.

குறித்த நேரத்துக்கு படப்பிடிப்புக்கு வராமல் இழுத்தடிப்பது போன்ற பல தொந்தரவுகளை தயாரிப்பாளருக்கு கொடுத்து வருகின்றனர். அதோடு ஹீரோக்கள் வைப்பதுதான் இங்கு சட்டமாக இருக்கிறது. இதனால் அந்தக்கால சினிமா தயாரிப்பாளர்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது இப்போது இருக்கும் தயாரிப்பாளர்கள் ஹீரோக்களுக்கு அடிமையாக மாறி போன அவல நிலை பெரிதும் வருத்தத்திற்குரியது.



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,