பிக்சட் டெபாசிட்டை விட இந்த திட்டத்தில் வட்டி அதிகம்

 


நிஜம் தான் நம்புங்க.. பிக்சட் டெபாசிட்டை விட இந்த திட்டத்தில் வட்டி அதிகம்


 பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வதை காட்டிலும், முதலீட்டிற்கு பாதுகாப்பு தரும் திட்டங்களில் பணத்தை செலுத்த பலரும் விரும்புகின்றனர். அதுபோன்ற திட்டங்களில் தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டம், பிக்ஸட் டெபாஸிட் திட்டம், பிஎஃப் திட்டம் போன்றவை முக்கிய பங்கு வகிக்கின்றன.

தேசிய சேமிப்பு சான்றிதழ் என்றால் என்ன?

இது ஒரு வரையறுக்கபட்ட வருவாயை கொண்ட முதலீட்டு திட்டமாகும். அஞ்சல் நிலையங்கள் வாயிலாக இந்தத் திட்டத்தில் சேர்ந்து கொள்ளலாம். தற்போது, இந்த திட்டத்தில் சேரும் வாடிக்கையாளர்களுக்கு ஆண்டுதோறும் 6.8 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. பாண்டு எனப்படும் ஒப்பந்த ஆவணங்களின் லாபத்திற்கு ஏற்ப ஒவ்வொரு காலாண்டுக்கும் ஒருமுறை வட்டி விகிதம் மாற்றி அமைக்கப்படும் சிறு சேமிப்பு திட்டம் இதுவாகும்.


சிறு அளவிலான மற்றும் நடுத்தர அளவிலான வருவாய் கொண்டவர்களின் பாதுகாப்பான முதலீடு மற்றும் ஆபத்து இல்லாத முதலீடு வாய்ப்பு கருதி இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

திட்டத்தில் சேருவதற்கான தகுதிகள் :

தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டத்தில் சேருவதற்கு குறைந்தபட்சம் ரூ.1,000 முதலீடு செய்ய வேண்டும். அதற்குப் பிறகு ரூ.100 மதிப்பின் பெருக்கல் அடிப்படையில் எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்து கொள்ளலாம். திட்டத்தில் முதலீடு செய்வதற்கான அதிகபட்ச வரம்பு எதுவும் இல்லை.

வயது தகுதி உடைய பெரியவர் சார்பில் தன் பெயரில் அல்லது மைனர் சார்பில் சிங்கிள் அக்கவுண்ட் திறந்து கொள்ளலாம்.

ஜாயிண்ட் ஏ என்ற வகையிலான அக்கவுண்ட் திறப்பதன் மூலமாக, மூவரை இணைக்கலாம். மெச்சூரிட்டி தொகையை அக்கவுண்டில் உள்ள இருவரும் அல்லது உயிருடன் இருக்கும் ஒருவர் பெற்றுக் கொள்ளலாம்.

ஜாயிண்ட் பி என்ற வகை அக்கவுண்டில் 3 பெரியவர்கள் திட்டத்தில் இணைந்து, உயிருடன் இருக்கும் எவர் வேண்டுமானாலும் பணத்தை பெற்றுக் கொள்ளலாம். வங்கிகளில் கடன் பெறும் வசதி உண்டு.

பிக்சட் டெபாசிட் திட்டங்களுடன் வட்டி ஒப்பீடு :

ஹெச்டிஎஃப்சி வங்கி, ஆக்சிஸ் வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி போன்றவை தங்களது பிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டியை அண்மையில் உயர்த்தின. ரூ.2 கோடிக்கும் குறைவான முதலீடுகளுக்கு 5.1 சதவீதம் முதல் 5.6 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது ஹெச்டிஎஃப்சி வங்கி. அதுவே பெண்கள், மூத்த குடிமக்கள் போன்ற வரம்புகளைப் பொறுத்து வட்டி விகிதம் மாறுபடுகிறது.

ரூ.2 லட்சத்திற்கும் மேற்பட்ட முதலீடுகளுக்கு 4.45 சதவீதம் முதல் 4.65 சதவீதம் வரையிலான வட்டியை ஆக்சிஸ் வங்கி, ஹெச்டிஎஃப்சி உள்ளிட்டவை வழங்குகின்றன.

ஆனால், தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டத்தில் தற்போது 6.8 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. ஏப்ரல் - ஜூன் வரையிலான காலாண்டுக்கு வட்டி விகிதம் எதையும் அரசு மாற்றியமைக்கவில்லை.



Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி