ஜென் நிலை என்றால் என்ன? கூகுள் அளித்த ஹாஹா பதில்

 

ஜென் நிலை என்றால் என்ன? கூகுள் அளித்த ஹாஹா பதில் என்னனு நீங்களே பாருங்க!இன்றைய உலகில் கை இல்லாமல் கூட இருந்து விடலாம் ஆனால் கையில் செல்போன் இல்லாமல் ஒரு மணி நேரம் கூட இருக்க முடியாது என்ற நிலையில் தான் பலரும் உள்ளனர். அந்த அளவுக்கு செல்போன் நம்மை ஆக்கிரமித்துள்ளது.கூகுள் குரோம் குறிப்பாக செல்போன் மட்டுமல்ல கம்யூட்டர் வீடுகளுக்கு வருவதற்கு முன்பே ப்ரவுசிங் செண்டர்களில் தொடங்கி ஆண்ட்ராய்டு ஐஓஎஸ் மெபைல்கள் வரை கூகுள் குரோமை பயன்படுத்தாதவர்கள் இருக்கவே முடியாது. மோசில்லா உள்ளிட்ட சர்ச் எஞ்சின்கள் இருந்தாலும், பலருக்கு மிகவும் பிடித்த சர்ச் எஞ்சின் என்றால் அது கூகுள் குரோம் தான்
தகவல்களை தேடலாம் அந்த அளவுக்கு குரோம் என்பது விரைவான, பயன்படுத்துவதற்கு எளிதான மற்றும் பாதுகாப்பான இணைய தேடுதல் கருவியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆண்ட்ராய்டு போன்களுக்காக வடிவமைக்கப்பட்ட குரோமில் செய்திக் கட்டுரைகள், உங்களுக்குப் பிடித்த வலைதளங்களுக்கான உடனடி இணைப்புகள், பதிவிறக்கங்கள்,கூகுள் தேடல் உள்ளிட்ட பல தகவல்களை தேடலாம்.
ஜென் நிலை என்றால் என்ன சில நேரங்களில் வித்தியாசமான தகவல்கள் கூகுளில் வருவது வழக்கம். வடை சுடுவது முதல் விண்வெளிக்கு ராக்கெட் அனுப்புவது வரை பல்வேறு தகவல்கள் கூகுளில் கொட்டிக் கிடந்தாலும் சில நேரங்களில் சிக்கலில் சிக்கும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. அதாவது குறிப்பிட்ட சில தகவல்களை யார் வேண்டுமானாலும் இணையத்தில் பதிவேற்றம் செய்யலாம் என்பதால் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது வழக்கம். அந்த வகையில் தற்போது ஜென் நிலை என்றால் என்ன என்று டைப் செய்தால் வரும் பதில் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சுவாரசிய பதில் நீங்கள் உங்கள் போனிலோ அல்லது கம்யூட்டரிலோ ஜென் நிலையில் என்றால் என்ன என டைப் செய்யும் போது, "காதலியுடன் மகிழ்ச்சியாக இருக்கும் போது அவள் திடீரென புருசன் வந்துவிட்டால்,அவன் போகும்வரை பரணில் அமைதியாக ஒளிந்திருப்பதே ஜென் நிலை." என பதில் வருகிறது. இந்த பதிலை கண்டு பலரும் அதிர்ச்சியானாலும், பல குறும்புக்கார நெட்டிசன்கள் இதனை சமூக வலைதளங்களில் கலாய்த்து வருகின்றனர்.

நீங்களும் டைப் செய்யுங்க

courtesy
https://tamil.oneindia.com/

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

ஆரஞ்சுப் பழத்தின் பயன்கள்:

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி