வரம்பு மீறாதே வழியின்றி போவாய்

 சூரியக்கதிர்களை பார்த்து பதர்கள் குறைகூறுவதா


``
மனிதன் பக்தி வைத்தான் பதிலுக்கு நீ என்ன வைத்தாய் இறைவா மானிடனை வதைக்கிறாயே, கல்லில் வடித்தச் சிற்பத்தில் கருணைக் கடலை வைத்தானா சிற்பி உளி வலியால் கடந்திருப்பானா அருபொருளாக. மாறி இருப்பானா கடவுள், கல்லில் உண்டு இல்லையோ என்று நினைக்கத்தான் தோன்றுகிறது , அவலநிலைக் கூடிக்கொண்டே செல்கிறது இத்திருநாட்டில் ஆட்சியில் தவறில்லை அரசும் இதற்கு பொறுப்பில்லை,, தரங்கெட்டுப் போகும் பள்ளிமாணாக்கர் வீதியிலும் குடுமிப்பிடி தான் இன்றளவும் பால்வினை பிரிவின்றி ஆங்காரம் ஓங்குது பாடசாலை அறைகளில் தவிர்க்குமோ, தளைக்கும் தலைமுறை ஐயோ அம்மாவென ஒப்பாரி குரல்கள் எத்திசையிலும் காதை பிளக்கின்றன. தீக்கி இரையாகிப் போகிராரே நெருப்புக்கு அத்தனை பசியுமுண்டா அக்கினிக்கு ஏனிந்த ஆவேசமோ தேரிலுத்து தெருவில் போனால் வீதியில் பிணங்கள் பறையிசைத்து அழைத்து மரணமா வதா, சோடித்த மலர்கள் முக்கண் முக்கனி படைத்தது போதாதா,, சுவாமியே உயிரெடுத்து தேசத்தின் கண்ணீரை தீர்த்தமாக்கிக் கொள்வாயோ,, பார்க்கும் இடமெல்லாம் தீதீ என்ற சேதி தீப்போல் சுடுகிறதே, பல்லாக்கு இழுத்தோர் பாடையில் இன்று, இதைபார் மாணவனே நீ திருந்த நல்வாய்பாகும் பலரின் உயிர் உன்னை திருத்திடுமா,,,, நாச வேலையில் ஈடாகாதே நாளை சீர்த்திருத்த பள்ளியில் கண்ணீர் வடிப்பாய் சிந்தி, உன் கண்திற உலக அவலத்தை பார் ஒவ்வொரு நாளும் வாழ்க்கையை வாழ போராடிக்கொண்டிருப்பதை பார், வரம்பு மீறாதே வழியின்றி போவாய்
-

S. Krishna Veni


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

ஆரஞ்சுப் பழத்தின் பயன்கள்:

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி