மூப்பில்லா தமிழே தாயே

 மூப்பில்லா தமிழே தாயே பாடலை எழுதிய கவிஞர் தாமரையின் பேச்சை நான் கேட்டதின் சாரம்


"எனது பெயர் தாமரை. எனது தங்கை பெயர் மல்லிகை. எனது அண்ணன் பெயர் பூங்குன்றன். எனது அம்மா தமிழாசிரியர். எனது அப்பா கணிதம், ஆங்கில ஆசிரியராக இருந்தாலும் தமிழ்க் கவிஞர். அதனால் நான் குடும்பத்தில் இயல்பான தமிழ்ச் சூழலிலேயே வளர்ந்தேன். பள்ளியில் தமிழிலேயே படித்தேன்.
உலகத் தமிழர்களை இணையம் வழியாக ஒன்றினைக்கும் பாடலை எழுதவேண்டும் என்று ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் கேட்டார்கள். திரைப்பாடல் என்றால் அந்த காட்சிக்காக ஒரு எல்லைக்குள் எழுத வேண்டும். ஆனால் தனிப்பாடலுக்கு அது கிடையாது. ஏற்கனவே மெட்டு அமைத்து அவர் வைத்திருந்தார். அதற்காக நான் பாடல் எழுதினேன். தமிழின் பெருமையைச் சொல்லி விட்டு அடுத்து தமிழைக் காக்க என்ன செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் எழுதினேன்.
வள்ளுவர் திருக்குறளில் தமிழைப் பற்றி ஏன் பேசவில்லை என்றால் அப்போது தமிழ் மொழியை எல்லோரும் இயல்பாகப் பேசி, கையாண்டு வந்தார்கள். தமிழுக்கு அப்போது எந்த ஆபத்தும் இல்லாத சூழலில் அவர் தமிழை எங்கும் பேசவில்லை. நான் கூட திரைப்பாடல்களில் தமிழ் என்று எழுதி அதன் பெருமை அதிகம் சொல்லவில்லை. எனக்கு சொல்லை விடவும் செயலில் நம்பிக்கை அதிகம்.

குழந்தைகளைத் தமிழில் படிக்க வையுங்கள். குறைந்தது தமிழ்ப் பாடம் ஒன்று கண்டிப்பாக இருக்குமாறாவது பார்த்துக் கொள்ளுங்கள். வீட்டில், நண்பர்களிடம், உறவினர்களிடம் தமிழில் பேசுங்கள். குழந்தைகளுக்கு வாயில் நுழையாத பிற மொழிப்பெயர்களைச் சூட்டாமல் அழகான தமிழ்ப்
பெயரைச் சூட்டுங்கள். நாம் பிறமொழியை அழிக்கவோ வெறுக்கவோ இல்லை. ஆனால் நமது தமிழைக் காப்பாற்ற வேண்டும். தமிழ் என்பது கருத்துக்களைப் பறிமாறிக் கொள்ளும் கருவியல்ல. அது நமக்கான பண்பாடு, நமக்கான கலாச்சாரம். அதைக் காக்க வேண்டியது உலகத் தமிழர்கள் அனைவரது கடமை ஆகும். எனக்கு இந்தப் பாடலை எழுத வாய்ப்பளித்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுக்கும் மற்றும் இந்த வாய்பிற்கு எனக்கு உதவிய அனைவருக்கும் எனது நன்றி

by
kandasamy.r

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,