பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

 பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

பிறந்தநாளுக்காக 


         பாட்டுக்கு கோட்டையாக விளங்கும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் பிறந்த நாள்   13.4.1930

இவரின் பாடல்கள் பெரும்பாலும் உழைப்பவர்களைப் பற்றியே அதிகம் இருந்தன. இவரின் ஒவ்வொரு பாடல்களும் கருத்துள்ள சிந்தனை . மனிதர்களின் குணங்களைப் பற்றியும், திருட்டு, ஏமாற்று, மூட நம்பிக்கை, கற்பு நெறி, ஏழைகளின் உழைப்பு ஆகியவைகளைப் பற்றியே அதிகம் இருந்தது.


           சமுதாய சிந்தனைகளை மக்களிடத்தில் எடுத்துச் சென்ற ஒரே கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் என சொல்லலாம் . இவரின் அனைத்து பாடல்களும் வலிமையானவை  தமிழக அரசால் நாட்டுடமையாக்கப்பட்டன.   

 திருட்டு என்பது எவ்வளவு மோசமனா தொழில் அதை சிறியவர்களுக்கு சொல்வது போல் பெரியவர்களுக்கு உணர்த்துவது இவரது தனிச் சிறப்பு. குழந்தையிலே பிள்ளைகள் நல்லவனாக வரவேண்டும் என்று தனது சிந்தனைகளை புகுத்தியவர்.


திருடாதே பாப்பா திருடாதே

 வறுமை நிலைக்குப் பயந்து விடாதே திறமையிருக்கு மறந்துவிடாதே

 சிந்தித்துப் பார்த்து செய்கையை மாத்து - தவறு

சிறுசா இருக்கையில் திருத்திக்கோ

தெரிஞ்சும் தெரியாமல் நடந்திருந்தா - அது

 திரும்பவும் வராமே பார்த்துக்கோ


              என்று அருமையாக சொல்லியிருக்கிறார்.


           நாடோடி மன்னன் படத்தில் சௌந்தரராஜன் பாடிய பாடல் எத்தனை தத்துவமான பாடல் சோம்பேறிகளைத் தட்டி எழுப்புகின்ற ஒரு பாடல்.


தூங்காதே தம்பி தூங்காதே - நீயும்

சோம்பேறி என்ற பெயர் வாங்காதே நீ

தாங்கிய உடையும் ஆயுதமும் பல

சரித்திரக் கதை சொல்லும் சிறைக்கதவும்

சக்தியிருந்தால் உன்னைக் கண்டு சிரிக்கும்

சத்திரந்தான் உனக்கு இடங்கொடுக்கும். இந்த பாடல்களின் ஒவ்வொரு வரியும்

தத்துவ நிறைந்த வரிகள்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,