"என்னைப் பொறுத்தவரை நான் முரண்படுகிறவனே தவிர மற்றவர்களை முரண்படுத்துவதில்லை” “புரியலை” என்றேன்.

 "என்னைப் பொறுத்தவரை நான் முரண்படுகிறவனே தவிர மற்றவர்களை முரண்படுத்துவதில்லை”

“புரியலை” என்றேன்.

“புரியலை?” என்றார் குரலை உயர்த்தி.
“இல்லை”
“சொல்கிறேன்.......நேற்று மாலை நீங்கள் என்னைப் பார்க்க வல்லிக்கண்ணனுடன் என்னுடைய அறைக்கு வந்தீர்கள் அல்லவா............அப்போது நான் என்ன உடுத்தியிருந்தேன்?”
“துண்டு”
“என்ன துண்டு? கோவணம் என்று சொல்லுங்கள்......நேற்றைக்கு நான் கோவணம் கட்டியிருந்தேன். காரணம் அது என்னுடைய அறை. இப்போது இந்தக் கருத்தரங்க ஹாலுக்கு எப்படி வந்திருக்கிறேன்? கோட் சூட் உடுத்தி............! அங்கே கோவணத்துடன் இருந்தவன் இங்கே கோட்டும் சூட்டும் உடுத்தி டை கட்டி வந்திருக்கிறேன் எனில் இது என்னுடைய முரண்பாடு........அதாவது என்னளவில் நான் முரண் பட்டிருக்கிறேன் என்று அர்த்தம். இங்கே கருத்தரங்க ஹாலுக்குள்ளும் நான் கோவணத்துடன் வந்து நின்றிருந்தேன் என்றால் மற்றவர்களை முரண்படுத்துகிறேன் என்று அர்த்தம்”
அவர் பேசுவதைக் கேட்டபடியே நடப்பது சுகமான அனுபவமாக இருந்தது. சுற்றிலும் மரம் செடி கொடிகள் அடர்த்தியாகச் சூழ்ந்திருந்த அந்த வனாந்திரத்தில் அவர் பாட்டுக்குத் தம்மை மறந்து பேசிக்கொண்டே வந்தார். அவரது அறை வந்ததும் சிரித்துக்கொண்டே “அதிகம் பேசி போரடிச்சுட்டேனா?” என்றார்
“அதிகம்தான் பேசினீர்கள்...........ஆனால் போரடிக்கவில்லை”
“எத்தனைப் பேசினாலும் பேசினது ராமாயணம்.................பேசாமல் விட்டது மகாபாரதம்” என்றார்.
அதுதான் ஜெயகாந்தன்!
நன்றி:அமுதவன் பக்கங்கள்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,