பென்சன் தொகை உயரப்போகுது..

 


பென்சன் தொகை உயரப்போகுது.. அரசு எடுக்கும் முக்கிய முடிவு!!


பென்சன் வாங்குவோரின் நீண்டநாள் கோரிக்கை குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு அரசு பச்சை கொடி காட்டினால் பென்சன் தொகை விரைவில் உயரும்.

தற்போது ஓய்வூதியதாரர்கள் 80 வயதை தொடும்போது பென்சன் தொகை 20% உயர்த்தப்படுகிறது. எனினும், 80 வயதில் பென்சன் தொகையை உயர்த்துவதற்கு பதிலாக 65 வயது முதல் பென்சன் தொகையை ஆண்டுக்கு 1% உயர்த்தினால் சரியாக இருக்கும் என பென்சனர் நல சங்கங்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

அண்மையில் பென்சனர்கள் தொடர்பாக நடந்த நிகழ்வில் மத்திய பென்சனர் நலத் துறை இணையமைச்சர் ஜித்தேந்திர சிங்கிடம் இதுகுறித்து ஓய்வூதியதாரர் நல சங்கங்கள் கோரிக்கை விடுத்தன. இதுகுறித்த நாடாளுமன்ற நிலைக் குழுவும் இதே பரிந்துரையை வழங்கியுள்ளது.

இந்நிலையில், பென்சன் தொகையை ஆண்டுக்கு 1% உயர்த்த வேண்டும் என்ற பரிந்துரையை மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து நிதியமைச்சகம் ஆலோசித்து வருவதாக அதிகாரிகள் வட்டாரத்தில் கூறுகின்றனர்.

இதற்கு அரசு ஒப்புதல் அளித்தால் ஓய்வூதியதாரர்களுக்கு பென்சன் தொகை ஆண்டுக்கு 1% உயரும். இதுமட்டுமல்லாமல், மருந்துகளின் விலை உயர்ந்துள்ளதால் மருத்துவப் படித் தொகையை (Fixed Medical Allowance) உயர்த்தி தர வேண்டும் என ஓய்வூதியதாரர் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

மருத்துவப் படித் தொகை 1000 ரூபாயில் இருந்து 2000 ரூபாயாக உயர்த்தி வழங்குவது குறித்தும் அரசு ஆலோசித்து வருகிறது. இதுபோக, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனைக்கு அரசு ஆதரவு தர வேண்டும் எனவும் பென்சனர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Comments

Popular posts from this blog

:இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள்? வாழ்வியல் முறையை மாற்றுங்கள்!

“சமயம் வளர்த்த தமிழ்” என்னும் தலைப்பில் திரு என்.அசோகன் கூடுதல் பதிவாளர் (ஓய்வு )அவர்களின் சொற்பொழிவு

சிறுநீர் அடங்காமைக்கு ( urinary incontinence) யோக மற்றும் இயற்கை மருத்துவம்