*வாழைப் பூவில் உள்ள மகத்துவங்கள்
*வாழைப் பூவில் உள்ள மகத்துவங்கள். ஆண்களுக்கும் பெண்களுக்கும் அருமருந்து.*
இன்றுள்ள காலகட்ட நிலையில் உடலுக்கு சத்தான உணவுகளை உண்ணுவது அவசியம். இதனைப்போன்று உடலுக்கு நன்மை செய்யும் பழங்களை சாப்பிடுவதும் நல்லது.
தினமும் பல்வேறு பணிகளை தொடர்ந்து செய்து வரும் நாம்., நமது உடலுக்கு தேவையான சத்துக்களை வழங்கும் பழங்களை சாப்பிட்டு வந்தால்., நமது உடல் புத்துணர்ச்சி அடைந்து நல்ல நிலையில் பராமரிக்கப்படும்.
வாழைப்பழங்கள் வகையில் அனைத்து வாழைப்பழங்களை நன்மையை நமக்கு செய்கிறது. வாழைப்பழங்களை போல வாழையில் உள்ள இலை., தண்டு., பூ என வாழை மரத்தின் அனைத்து பாகமும் நமக்கு உதவி செய்து வருகிறது. வாழைப்பூவில் இருக்கும் மருத்துவ குணங்கள் மற்றும் நமது உடலுக்கு ஏற்படும் நண்மைகள் குறித்து இனி காண்போம்.
வாழைப்பூவில் இருக்கும் துவர்ப்பு சத்தானது உடலுக்கு நன்மையை அளிக்கிறது. இது பெண்களின் கர்ப்பப்பைக்கு நல்ல சக்தியை வழங்குகிறது. சர்க்கரை நோயின் பிடியில் இருக்கும் நபர்கள் வாழைப்பூவை நன்றாக சுத்தம் செய்து., சிறிது சிறிதாக நறுக்கிய பின்னர் சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு., மிளகு சேர்ந்து பொரியலாக செய்து சாப்பிட்டால் கணையமான நன்றாக வலுப்பெறும்.
இதன் காரணமாக இன்சுலினை சுரக்க செய்து., சர்க்கரை நோயினை கட்டுக்குள் கொண்டு வர வைக்கிறது. மலத்துடன் இரத்தம் வெளியேறும் பட்சத்தில்., இரத்த மூலம் இருக்க வாய்ப்புள்ளது. இதனை சரி செய்ய வாரத்திற்கு இரண்டு முறை வாழைப்பூவை உணவில் சேர்த்து கொண்டால் இரத்த மூலமானது சரியாகும்.
வாழைப்பூவோடு பாசிப்பருப்பு சேர்த்து கடைந்து நெய்யினை சேர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலின் சூடானது குறைந்துவிடும். வாழைப்பூவினை நீரில் கலந்து கொண்டு., இதோடு சீரகம் மற்றும் மிளகுத்தூள் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டிய நீரினை., இதமான சூடோடு அருந்திவரும் பட்சத்தில் அஜீரண கோளாறு பிரச்சனையானது நீங்கிவிடும்..
மாதவிடாய் சமயங்களில் பெண்களுக்கு அதிகளவு உதிரப்போக்கு ஏற்படும் பட்சத்தில்., வாழைப்பூவின் வெண்மையான பாகத்தை பாதியளவு எடுத்து நசுக்கி., சாறாக மாற்றி சிறிதளவு மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க வைத்து., பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வந்தால் உதிரப்போக்கு கட்டுக்குள் இருக்கும். உடலின் அசதி மற்றும் வயிற்று வலி., பிறப்புறுப்பு வலியானது குறையும். இதனைப்போன்று வெள்ளைப்படுதல் பிரச்சனைக்கு வாழைப்பூ ரசம் வைத்து சாப்பிட வெள்ளைப்படுதல் பிரச்சனை சரியாகும்.
*பகிர்வு*
Comments