தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் !/கவிதை
செந்நெல் வீதியில் புரள சித்திரை திருமகள் வருகிறாள்
செந்தமிழையே காற்சிலம்பாக கொண்டு ..
பட்டிதொட்டியெங்கும் பகலவன் வீசிட
பாங்காய் கனிகளை கொட்டிடும்
பல மர தாய்களை பெற்ற மகிழ்ச்சியில்..
ஈன்ற பொழுதினும்..பெரிதாக உவக்க நினைக்கிறாள்...
ஈடாக தம் மக்கள் மாற்றம் கண்டு வருந்தியே வாடுகிறாள்..
மட்டில்லா ஆனந்தம் ஏற்படுத்தும்
சிற்சில செயல்களால்
மாரியும் பொழிந்திட ஆக்கமும் ஆனதென்றும்..ஆனந்தமும் கூடிட..
சித்திரை திருமகள் வருகிறாள்..
சித்திரை திருமகள் வருகிறாள்...
சுபகிருது ஆண்டே வருக!
கேட்டதனைத்தும் தருக!!
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் !
சுமிதாரமேஷ்
Comments