ஹாட்ரிக் அடித்த ராஜமௌலி
500 கோடி வசூலை தாண்டிய பிரமிக்க வைத்த 7 படங்கள்.. ஹாட்ரிக் அடித்த ராஜமௌலி
ஆர்ஆர்ஆர் : ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ஆர் ஆர் ஆர். தெலுங்கில் முன்னணி நடிகர்களாக உள்ள இந்த இரண்டு நடிகர்களும் ஒன்றாக இணைந்தால் படம் திரையரங்குகளில் வசூலை வேட்டையாடி வருகிறது. ஆர் ஆர் ஆர் படம் வெளியாகி 3 நாட்களில் 500 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
பாகுபலி 2 : ராஜமௌலி இயக்கத்தில் 2017ஆம் ஆண்டு பாகுபலி முதல் பாகத்தின் தொடர்ச்சியாக பாகுபலி 2 வெளியானது. இப்படம் முதல் பாகத்தின் தொடர்ச்சி என்பதால் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகியிருந்தது. இப்படம் ஒரே நேரத்தில் தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் தயாரிக்கப்பட்டு இருந்தது. பாகுபலி படம் வெளியான பதினைந்தே நாட்களில் 1,250 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது
2.0 : ஷங்கர் இயக்கத்தில் 2010ஆம் ஆண்டு வெளியான எந்திரன் படத்தின் தொடர்ச்சியாக 2018 இல் 2.0 படம் வெளியானது. இப்படத்தை மிகப்பெரிய பொருட்செலவில் லைக்கா புரொடக்சன்ஸ் தயாரித்திருந்தது. இப்படத்தில் ரஜினி, அக்ஷய்குமார், எமி ஜாக்சன் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் 750 கோடி வசூல் செய்திருந்தது.
பாகுபலி : ராஜமௌலி இயக்கத்தில் 2015-ல் வெளியான திரைப்படம் பாகுபலி. இப்படத்தில் பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன், தமன்னா, சத்யராஜ் மற்றும் பலர் நடித்திருந்தனர். பாகுபலி படம் வெளியாகி 87 நாட்களுக்கு மேல் வெற்றிகரமாக ஓடியது. இப்படத்தின் 586 கோடி வசூல் செய்தது
தங்கல் : நித்திஸ் திவாரி இயக்கத்தில் 2016இல் ஹிந்தி மொழியில் வெளியான திரைப்படம் தங்கல். இப்படத்தில் அமீர்கான், கிரண் ராவ், சாக்ஷி தன்வர் மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் மல்யுத்த விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருந்தது. இப்படம் உலகம் முழுவதும் 741 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.
தூம் 3 : ஜெய் கிருஷ்ணா ஆச்சார்யா இயக்கத்தில் அமீர்கான், அபிஷேக் பச்சன், கத்ரீனா கைப், சித்தார்த் மற்றும் பலர் நடிப்பில் 2013ல் வெளியான திரைப்படம் தூம் 3. இதற்கு முன்னதாக 2006 இல் வெளியான தூம் 2 படத்தின் தொடர்ச்சியாக இப்படம் வெளியானது. இப்படம் பாக்ஸ் ஆபீஸில் 557 கோடி வசூல் செய்தது.
சுல்தான் :அப்பாஸ் ஜாஃபர் இயக்கத்தில் சல்மான் கான், அனுஷ்கா சர்மா மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் சுல்தான்.உலக மல்யுத்த சாம்பியனுமான சுல்தான் அலி கானை மையமாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டது. சுல்தான் படம் உலகம் முழுவதும் 623 கோடி வசூல் செய்தது.
Comments