லைட்பாய் வீட்டுக் கல்யாணம்

 லைட்பாய் வீட்டுக் கல்யாணம்
ஒரு நாள் வாசன் தனது அலுவலகத்தில் அமர்ந்து அன்றாட அலுவல்களைக் கவனித்துக் கொண்டிருந்தார். பையன் ஒரு சீட்டைக் கொண்டு வந்து நீட்டினான். "அவரை உள்ளே வரச் சொல்லு" என்றார். ஒரு ஏழை வயோதிகர் உள்ளே வந்து தன் எஜமானரைக் கும்பிட்டார்.
லைட் பாயாகப் பல ஆண்டுகள் அவரது ஸ்டுடியோவில் பணியாற்றி ஓய்வு பெற்ற அந்த முதியவர் " எம்பேரனுக்குக் கல்யாணம் உங்களுக்கு நோட்டீஸ் வைக்க வந்தேன் என்று கூறி ஒரு சிறு அழைப்பிதழ் அடங்கிய காகித உறையை நீட்டினார். அதை வாங்கிக் கொண்டு 'சரி'
என்றார் வாசன்.
பெரியவர் போய் விட்டார்.
குறிப்பிட்ட முகூர்த்த நாள்
வழக்கம் போலக் காரை வாசனே ஓட்டிக்கொண்டு கிளம்பினார். சாலை ஓரமாக ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு நடைபாதையில் போனவரிடம் பத்திரிகையில் உள்ள முகவரியைக் காட்டிக் கேட்டார். அதற்கு அவர் "அதோ, அந்தச் சேரிக்குள்ளே நொயஞ்சி, பீச்சக்கைப் பக்கம் போனீனா, அதுக்கப்பால கீது இந்தத் தெருவு!" என்று சொல்ல சேறும் சகதியும் நிறைந்திருந்த அந்த சேரிக்குள் நுழைந்து ஒரு வழியாகக் கல்யாண வீட்டைக் கண்டு பிடித்தார்.
அந்த லைட்பாய், ஓடிவந்து கும்பிட்டவண்ணம் "ஐயா! நீங்க எதுக்கய்யா இங்கே வந்தீங்க? நான் பல வருஷமா உப்பைத் திண்ண முதலாளிக்கு, ஒரு மரியாதைக்குத்தான் நோட்டீஸ் வைச்சேன் என்று அங்குமிங்கும் ஓடி கொண்டு வந்து போட்ட ஒரு ஓட்டை நாற்காலியில் அமர்ந்த வாசன் 'மாங்கல்ய தாரணம்' வரையிலும் இருந்து ஒரு தம்ளர் கல்யாணக் காபியையும் குடித்தார். பின்னர் அந்தப் பெரியவரிடம் பணம் கொண்ட ஒரு கவரைக் கொடுத்து விட்டுக் கிளம்பினார்.
ஆரூர்தாஸ்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

விநாயகருக்கு என்னென்ன பொருட்கள் அபிஷேகம் செய்தால் பலன்