சுகரை ஓட ஓட விரட்ட இந்த ஒரு உணவு போதும்..

 


சுகரை ஓட ஓட விரட்ட இந்த ஒரு உணவு போதும்.... தினமும் எவ்வளவு தெரியுமா?


தினமும் பாதாம் சாப்பிடுவது உடலுக்கு பல்வேறு ஆரோக்கியத்தை அள்ளி கொடுக்கும்.

தேநீர் நேர சிற்றுண்டியாக கூட ஒரு கைப்பிடி அளவு பாதாம் சாப்பிடடுவது நல்லது.

பாதாம் உங்கள் உணவில் சேர்க்க எளிதான உணவுகளில் ஒன்றாகும்.

நீங்கள் சமைக்கும் உணவிலும் பாதாமை சேர்க்கலாம்.

சமீபத்திய ஆய்வின்படி, உங்கள் அன்றாட உணவில் 45 கிராம் பாதாம் சேர்த்துக்கொள்வது கெட்ட கொழுப்பை குறைக்கவும், டிஸ்லிபிடெமியா போன்ற நிலைமைகளைப் போக்கவும் உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளது.    

சர்க்கரை நோயாளிகள் பாதாம் சாப்பிடலாமா?

சர்க்கரை நோய் வராமல் தவிர்க்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு பாதாம் ஓர் அருமருந்தாகும்.

ப்ரீ டயப்பாட்டீஸ் இருப்பவர்கள் பாதாம் கண்டிப்பாக சாப்பிட வேண்டும்.


இது இன்ஸுலின் சுரப்பை கட்டுப்படுத்தி சர்க்கரை அளவினை இன்னும் அதிகப்படுத்தாமல் வைத்திருக்கும்.


பாதாமில் சற்று அதிகமாக இருக்கக்கூடிய சத்துக்களில் முதன்மையானது மக்னீசியம். உங்கள் உடலில் போதுமானளவு மக்னீசியம் இருந்தால் டைப் 2 டயப்பட்டீஸ் பிரச்சனை வராமல் தவிர்க்க முடியும்.

அதே நேரத்தில் சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு தங்கள் உடலில் மக்னீசியம் சீக்கிரம் கரையும். அவர்களது சிறுநீர் வழியாக மக்னீசியம் சத்து வெளியியேறிடும். இவர்களுக்கு பாதாம் நல்ல பலன் அளிக்கக்கூடியது.

இதய நோயை விரட்டியடிக்க

சர்க்கரை நோய் வந்து விட்டாலே கூடிய விரைவில் இதயம் தொடர்பான பிரச்சனைகள் தானாக வந்து சேர்ந்துவிடுகிறது. இதயம் தொடர்பான பிரச்சனை இருந்தாலும் சரி அல்லது சர்க்கரை நோய் இருந்தாலும் சரி நீங்கள் பாதாம் சாப்பிடலாம்.

இந்த பிரச்சனையுடன் உணவை எடுத்துக் கொள்ள தயங்குகிறவர்களுக்கு பாதாம் மிகச்சிறந்த உணவாகும். பாதாம் மாவுப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது.



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

ஆரஞ்சுப் பழத்தின் பயன்கள்:

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி