முட்டை பிரியாணி

 முட்டை பிரியாணி
நினைத்த உடனேயே பிரியாணி செய்வது என்பது கடினமான விஷயம்தான். ஆனால் வீட்டில் ஐந்து முட்டைகள் மட்டும் இருந்தால் போதும். உடனே முட்டை பிரியாணி செய்துவிடலாம். இதன் சுவை அப்படியே கறி சேர்த்து செய்யும் பிரியாணியின் சுவையில் இருக்கும். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.


தேவையான பொருட்கள்: 

பிரியாணி அரிசி – அரைகிலோ, முட்டை – 5, எண்ணெய் – 6 ஸ்பூன், நெய் – ஒரு ஸ்பூன், பிரியாணி இலை – 1, பட்டை சிறிய துண்டு – 1, ஏலக்காய் – 2, சோம்பு – அரை ஸ்பூன், கிராம்பு – 2, மராட்டி மொக்கு – 1, ஸ்டார் பூ – 1, இஞ்சி பூண்டு விழுது – ஒரு ஸ்பூன், கொத்தமல்லி – ஒரு கைப்பிடி, புதினா தழை ஒரு கைப்பிடி, தனி மிளகாய்த் தூள் – ஒன்றரை ஸ்பூன், வெங்காயம் – 1, தக்காளி – 2, பச்சை மிளகாய் – 2, வரமிளகாய் – 2, உப்பு – ஒரு ஸ்பூன்.

செய்முறை: முதலில் முட்டையை வேக வைத்து தோலுரித்து வைக்க வேண்டும். பின்னர் தக்காளி, வெங்காயம், பச்சைமிளகாய் இவை அனைத்தையும் நீளவாக்கில் அரிந்து வைத்த வேண்டும். அடுத்து ஒரு பேனை அடுப்பின் மீது வைத்து, ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, அதில் கால் ஸ்பூன் உப்பு, அரை ஸ்பூன் மிளகாய் தூள் சேர்க்க வேண்டும்.

 பிறகு முட்டையின் மேல்புறத்தில் லேசாக கீறிவிட்டு, மசாலாவில் சேர்த்து பிரட்டி எடுக்க வேண்டும் . பிறகு அடுப்பின் மீது ஒரு குக்கரை வைத்து, அதில் 5 ஸ்பூன் எண்ணெய், ஒரு ஸ்பூன் நெய் சேர்க்கவேண்டும். 

பிறகு இதனுடன் தாளிப்பதற்கு தேவையான அனைத்து மசாலாக்களையும் சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். அதன் பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.


பிறகு தக்காளி, பச்சை மிளகாய், வரமிளகாய் மற்றும் புதினா, கொத்தமல்லி இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக கலந்துவிட வேண்டும். பிறகு ஒரு டம்ளர் அரிசிக்கு ஒன்றரை டம்ளர் தண்ணீர் என்ற பதத்தில் தேவையான அளவு தண்ணீரை ஊற்ற வேண்டும்.


 பிறகு 20 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்த பிரியாணி அரிசியை சேர்த்து கலந்து விட வேண்டும். அப்பொழுது ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு குக்கரை மூடி 5 நிமிடத்திற்கு அப்படியே வேக விடவேண்டும். பின்னர் குக்கரை திறந்து சாதத்தின் மீது முட்டைகளை வைத்து விட்டு, மறுபடியும் மூடி போட்டு, விசில் போட்டு, சிம்மில் வைத்து 5 நிமிடம் அல்லது ஒரு விசில் வரும் வரை வேக வைத்து எடுத்தால், சுவையான முட்டை பிரியாணி தயாராகி விடும்.Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,