மிஸ்டர் ரவி".. ஸ்டாலினுக்காக பார்க்கிறோம், ரயிலில் அனுப்பிடுவோம்..

 

மிஸ்டர் ரவி".. ஸ்டாலினுக்காக பார்க்கிறோம், ரயிலில் அனுப்பிடுவோம்.. "கோமளவள்ளி"தான்.. ஈவிகேஎஸ் டமார்






இளங்கோவன் அதன்படி, சைதாப்பேட்டை சின்னமலையில் உள்ள ராஜீவ்காந்தி சிலை அருகிலிருந்து புறப்பட்டு ஆளுநர் மாளிகையை நோக்கி கண்டன ஆர்ப்பாட்ட பேரணி நடந்தது.. இதில் தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.. அனைவருமே ஆளுநருக்கு எதிராக பேசி, எதிர்ப்புகளை பதிவு செய்தனர்.. ஆனால், கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஈவிகேஎஸ் இளங்கோவன் பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.
நாகாலாந்து இளங்கோவன் பேசும்போது, "ஆளுநரே, நாகலாந்துகாரர்களை போல, தமிழ்நாட்டு மக்களை நினைக்காதீங்க.. அப்படி நினைத்தால், விளைவுகள் ரொம்ப மோசமாக இருக்கும்.. ஆளுநரை ஆளுநர் என்று சொல்லாமல், வெறும் ரவி என்றே சொல்லலாம்.. அவருக்கு என்ன மரியாதை? மரியாதை தர வேண்டிய அவசியம் கிடையாது... ரவி இதற்கு முன்பு வேலை பார்த்த நாகலாந்தில், பாம்பு கறி, நாய் கறி சாப்பிடுவார்கள்
கோமளவள்ளி ஆனால் தமிழ்நாட்டில் இருப்பவர்கள் நெல் அரிசி, சோறு சாப்பிடுபவர்கள். கொஞ்சம் உரசினாலும் தீ பற்றிக்கொள்ளும். இப்போது கூட செல்வப்பெருந்தகையிடம் சட்டமன்றத்தில் ஜெயலலிதா பற்றி சொல்லும்போது, கோமளவள்ளி என்றே குறிப்பிட்டு பேசியிருக்கலாம் என்றேன்... அமித்ஷா பேச்சைக் கேட்டுக் கொண்டு ரவி, எருமை மாடு போல அசைவற்று கிடக்கிறார்.. தமிழர்கள் நாகரிகமாக இருக்கிறார்கள் என்று ரவி நினைக்கிறார்.
போஸ்ட் மேன் 
தமிழர்களைப் பற்றி தெரிந்துகொள்ள, டெல்லியில் இருக்கும் பழைய தலைவர்களை கேட்டு பாருங்க.. தேவைப்பட்டால் தமிழர்கள் அநாகரீகமாகவும் நடந்து கொள்வார்கள்... தமிழக மக்கள் நினைத்தால் ஒரு நிமிடத்தில் ரவி தூக்கி எறியப்படுவார்... தபால்காரன் வேலையை செய்பவர்தான் ஆளுநர் ரவி.. இந்த ரவிக்கு வீடு போய் சேர வேண்டிய நேரம் வந்துவிட்டது.

ரவி குடும்பம் ரவியை ஒழிக்க நினைத்தால் அதை கொஞ்சம் சீக்கிரமாக செய்ய முடியும்.. ஆனால் ஸ்டாலின் ஆட்சிக்கு கெட்ட பெயர் வந்து விடக்கூடாது என்பதால் பொறுமையாக இருக்கிறோம்... ரவி அவர்களே, குழந்தை குடும்பத்தோடு இருக்கீங்க.. ஒருவாரத்திற்குள் நீட் மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பவில்லை என்றால் காங்கிரஸ் போராட்டம் தீவிரமாகும்... ரவி உங்களை ரயிலில் டெல்லிக்கு அனுப்பி வைத்து விடுவோம்" என்று பேசியிருக்கிறார்.
சரவெடி வழக்கம்போல், ஈவிகேஎஸ் பேசிய இந்த பேச்சும் இப்போதே வெடிக்க ஆரம்பித்துவிட்டது.. ஏற்கனவே இளையராஜாவை பற்றி சாதி ரீதியாக பேசியதற்கு, இப்போதுதான் போலீசில் புகார் அளவுக்கு சென்றுள்ளது.. இப்போது ஆளுநரையே இவ்வாறு பேசியுள்ள நிலையில், இது என்னாகுமோ? எங்கே போய் முடியுமோ? தெரியவில்லை

:  நன்றி

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,