புஸ்ஸென பொங்கி வரும் சப்பாத்தி

 

மாலை வரை அதே சாஃப்ட்; புஸ்ஸென பொங்கி வரும் சப்பாத்தி

 கோதுமை மாவில் கால்சியம், பொட்டாசியம், இரும்பு மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்களும், தாதுக்களும் நிரம்பியுள்ளன.
சப்பாத்தி செய்ய பயன்படுத்தும் கோதுமை மாவில் கால்சியம், பொட்டாசியம், இரும்பு மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்களும், தாதுக்களும் நிரம்பியுள்ளன. வைட்டமின் பி 1, பி 2, பி 2, பி 6 மற்றும் பி 9 நிறைந்துள்ளததோடு கோதுமையில் சோடியம் மிக அதிகமாக உள்ளது.

120 கிராம் கோதுமையில் 190 மில்லிகிராம் சோடியம் உள்ளது. நீங்கள் செய்யும் மிருதுவான சப்பாத்தியில் வெஜ் அல்லது நான் வெஜ் குருமா சேர்த்து சாப்பிடால் ரொம்பவே டேஸ்டியாக இருக்கும். தவிர, வயது முதிர்ந்தவர்களுக்கும், நீரிழிவு நோயாளிகளுக்கும் இது மிகவும் ஏற்ற உணவு

இப்படியாக பல ஆரோக்கிய நன்மைகளையும், ஊட்டச்சத்துக்களையும் உள்ளடக்கியுள்ள சப்பாத்தியை எவ்வளவு நேரமானாலும் சாஃப்டாக இருக்க நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சிம்பிள் ட்ரிக்ஸை இங்கு பார்க்கலாம்.

சாஃப்ட் சப்பாத்திக்கு தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு – 1 கப்
உப்பு
தண்ணீர் – 1/2 கப்
எண்ணெய் – 1 டீஸ்பூன்

சாஃப்ட் சப்பாத்திக்கு சிம்பிள் டிப்ஸ்:

முதலில் ஒரு கப் கோதுமை மாவு எடுத்து அதை ஒரு அகலமான பாத்திரத்தில் சேர்த்து கொள்ளவும்.

பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து மாவுடன் காலத்து கொள்ளவும்.

தொடர்ந்து 1 கப் மாவுக்கு 1/2 தண்ணீர் என்ற விகிதத்திற்கு தண்ணீர் சேர்த்து மாவை உருண்டையாக பிசைந்து கொள்ளவும்.

பின்னர், அந்த மாவுடன் 1 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து மீண்டும் பிசைந்து கொள்ளவும்.

பிறகு மாவை பாத்திரத்தினுள் இருந்து எடுத்து தனியாக சமமான இடத்தில் அல்லது கட்டையின் மீது வைத்து நன்றாக பிசைந்துகொள்ளவும்.

எந்த அளவுக்கு நாம் அழுத்தம் கொடுத்து மாவை பிசைகிறோமோ அந்த அளவிற்கு சப்பாத்தி மிருதுவாக வரும். எனவே சப்பாத்தி மாவை நன்கு அழுத்தம் கொடுத்து பிசையவும்.

பின்னர் சப்பாத்திக்கான உருண்டைகள் பிடித்து அதை நன்கு உருட்டிக்கொள்ளவும்.

தொடர்ந்து உருண்டையை சப்பாத்தி கட்டையால் அழுத்தி தேய்க்க தொடங்கவும். எல்லா உருண்டைகளையும் இதேபோன்றே தேய்த்த பிறகு, அவற்றை கல்லில் இட்டு, இரண்டு புறமும் பிரட்டி எடுத்து வேக வைக்கவும்.

இப்போது சப்பாத்தி புஸ் என்று பூரித்து வரும். இவை அதிக நேரம் சாஃப்ட்டாக இருக்கும். இவற்றுடன் குருமா சேர்த்து ருசிக்கவும்.:

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,